சென்னை உட்பட 20 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் முக்கியம்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை, அதாவது அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை உட்பட 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டிருக்கிறது. இதற்காக ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டுக்கு இரண்டு பருவமழைகள் மழைப்பொழிவை கொடுக்கும். முதலில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை மாநிலம் முழுவதும் பரவலான மழையை கொடுக்கும். அந்த வகையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கிய தென் மேற்கு பருவமழை கன்னியாகுமரி முதல் கோவை வரை அடித்து பெய்தது. ஆனால் தூத்துக்குடி தொடங்கி, வங்கக்கடல் ஓரம் உள்ள மாவட்டங்களில் மழை போதுமான அளவுக்கு பெய்யவில்லை. நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் தஞ்சை மாவட்டங்களில் மழை இயல்பான அளவை விட குறைவாக பெய்திருந்தது.

இப்படி இருக்கையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அக்டோபர் 1ம் தேதி தொடங்கிய இம்மழை, சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் போதுமான அளவுக்கு மழையை கொடுத்திருக்கிறது. குறிப்பாக சென்னையில் இயல்பை விட 5 சதவிகிதம் அளவுக்கு மழை பெய்திருக்கிறது. இப்படி இருக்கையில் நவ.21ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மழை இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது காலை 10 மணி 20 மாவட்டங்களில் மழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "மயிலாடுதுறை மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது. தவிர சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, விருதுநகர், அரியலூர், பெரம்பலூர், கரூர், நாமக்கல், திருச்சி, ராமநாதபுரத்திற்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
மஞ்சள், ஆரஞ்சு அலர்ட் விளக்கம்: 64.5 மி.மீ முதல் 115. 5 மி.மீ வரை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டால், மஞ்சள் அலர்ட் விடுக்கப்படும். இதுவே, ஒரு நாளில் 115.6 முதல் 204.4 மிமீ வரையிலான மழைப்பொழிவுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்படும்.
ரெட் அலர்ட் விளக்கம்: மக்களின் இயல்பு நிலை பாதிக்கும் வகையில் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் இருக்கும் போது ரெட் அலர்ட் விடப்படும். இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டால் போக்குவரத்து, மின்சாரம், இணையம், மற்றும் தொலைத் தொடர்பு துண்டிக்கப்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன என்று அர்த்தம். 24 மணி நேரத்தில் 204.5 மிமீக்கு அதிகமாக மழை பெய்யும் போது ரெட் அலர்ட் விடுக்கப்படுகிறது.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
சென்னை முழுக்க மினி மால்.. அடி தூள்.. இனி வீட்டு பக்கத்திலேயே ஷாப்பிங், தியேட்டர், ஆபீஸ்! -
சென்னையில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்து.. தாம்பரம் அருகே பரபரப்பு -
நள்ளிரவு ‘பவர் கட்’.. சென்னையில் தொடர் மின்தடைக்கு பின்னணியில் இருக்கும் 3 ‘ஷாக்’ காரணங்கள்! -
1 BHK வீடு கட்டும் செலவில் கட்டிமுடிக்கப்பட்ட எழும்பூர் ரயில் நிலையம்.. இப்போ புத்தம் புதுசா மாறப்போகுது! -
சென்னை மக்களே! ரேஷன் அட்டையில் திருத்தம் செய்யணுமா? செம சான்ஸ்.. இன்னைக்கு மிஸ் பண்ணாதீங்க! -
4 மணி நேர மின்வெட்டு.. சென்னை ஆவடியில் கொந்தளித்த மக்கள்! சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு! -
சர்க்கரை அட்டை உங்களிடம் இருக்கா? சென்னை மக்களுக்கு ஒரே நாளில் பெயர் மாற்றத் தீர்வு தரும் தமிழக அரசு -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications