சென்னையில் பகலை இருளாக்கும் அளவிற்கு கனமழை... ஒரு மழை என்னவெல்லாம் செய்தது தெரியுமா?
சென்னை: சென்னையில் வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, திருவல்லிக்கேணி, அடையாறு மயிலாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. சென்னையில் பகலை இருளாக்கும் வகையில் கருமேகங்கள் சூழ்ந்து இடி மின்னலுடன் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் காரணத்தால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியிருந்தது.

நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் கூறியிருந்தது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியிருந்தது.
சென்னையில் வானிலை மையம் அறிவித்தபடியே கனமழை பெய்தது. காலையில் இருந்தே வானம் மேகமூட்டத்துடன் தான் காணப்பட்டது. இந்நிலையில் பிற்பகல 3 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பகலை இரவாக்கியது. அதன்பிறகு அப்படியே சிறிய காற்றுக்கூட இன்றி நின்று 3.25 மணி அளவில் நிதானமாக கனமழை பெய்ய தொடங்கியது.

குன்றத்தூர் தொடங்கி இந்த பக்கம் திருவல்லிக்கேணி வரையிலும், அந்த பக்கம் தாம்பரம் தொடங்கி வடசென்னையின் பல்வேறு பகுதிகளிலும், பள்ளிக்கரணை, பெருங்குடி, மடிப்பாக்கம், குரோம்பேட்டை, பல்லாவரம் என சென்னையின் தெற்கு பகுதிகளிலும் கனமழை பெய்தது. வானத்தில்வெடி வெடித்தது போல் இடிகள் இடித்தபடி கனமழை பெய்தது.
இந்த மழையால் சென்னையில் குளுகுளுவென வானிலை மாறி உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் சென்னையில் பல பகுதிகளில் உள்ள நீண்ட நாள் பிரச்சனையான நிலத்தடி நீர்மட்டம் உயரப்போகிறது. இந்த மழை சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அதேநேரம் சாலையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர்தேங்கி கிடக்கிறது. பல இடங்களில் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தபடி செல்கின்றன. இந்த மழையால் சாலையில் ஏற்பட்ட பாதிப்புகள் சரியாக குறைந்தது இரண்டு நாட்களாவது ஆகும்.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications