தடதடதட என கொட்டித் தள்ளப்போகும் கனமழை.. 2 பக்கமும் இடிக்குதே! இந்த வாரம் முழுக்க ட்ரீட் இருக்கு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்ட தகவலில், "நேற்று (22-10-2023) காலை மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று 17.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (23-10-2023) காலை 08.30 மணி அளவில் அதே இடத்தில் நிலவுகிறது. இது பரதீப் (ஒடிசா)-ற்கு தெற்கே சுமார் 360 கிலோ மீட்டர் தொலைவிலும், டிகா (மேற்கு வங்காளம்)- விற்கு தெற்கே - தென்மேற்கே சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலவுகிறது. இது வடக்கு-வடகிழக்கு திசையில் திரும்பி வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடலோரப் பகுதிகளை நோக்கி அடுத்த மூன்று தினங்களில் நகரக் கூடும்.

நேற்று (22-10-2023) மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய அதி தீவிர 'தேஜ்' புயல் இன்று (23-10-2023) காலை 0830 மணி அளவில் வலு குறைந்து மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மிக தீவிர புயலாக நிலவுகிறது. இது மேலும் வடமேற்கு திசையில் நகர்ந்து 24-10-2023 அன்று மிகத்தீவிர புயலாக ஏமன் கடற்கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 125 முதல் 135 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 150 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
23.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
24.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
25.10.2023: தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
26.10.2023 முதல் 29.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): ராதாபுரம் (திருநெல்வேலி) 6, இரணியல் (கன்னியாகுமரி) 5, குருந்தன்கோடு (கன்னியாகுமரி) 4, கன்னியாகுமரி, கொட்டாரம் (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), புத்தன் அணை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), அடையாமடை (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி) தலா 3, சூரலாகோடு (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), பாலமோர் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி), கோழிப்போர்விளை (கன்னியாகுமரி) தலா 2, சாத்தான்குளம் (தூத்துக்குடி), தக்கலை (கன்னியாகுமரி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), சாத்தான்குளம் ARG (தூத்துக்குடி), அணைகெடங்கு (கன்னியாகுமரி), ராமநாடு AWS (ராமநாதபுரம்), சோலையார் (கன்னியாகுமரி), நாகர்கோவில் (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), விளாத்திகுளம் (தூத்துக்குடி) தலா 1." என குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications