தமிழக மக்களே கவனம்.. காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் மழை இருக்கு.. உங்க ஊர் இருக்கா?
சென்னை: தமிழகத்தில் காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை 15 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்பட பல மாவட்டங்கள் உள்ளது.
தமிழகத்தில் தற்போது பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை முதல் கன்னியாகுமரி வரை பல மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் வெயில் முற்றிலுமாக குறைந்து சாரல் மழை இருந்து கொண்டே இருக்கிறது.

மொத்தமாக கூற வேண்டும் என்றால் தமிழகத்தில் வெயில் என்பது இல்லை. குளிர்ச்சியான சூழல் தான் பல்வேறு மாவட்டங்களில் நிலவி வருகிறது. இந்நிலையில் தான் சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று காலை 7 மணியில் இருந்து காலை 10 மணி வரை 3 மணிநேரத்துக்கான வானிலை தகவலை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் 15 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதன்படி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, தேனி , திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலையிலும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 15 மாவட்டங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்லும் மக்கள் கையில் குடையை வைத்து கொள்வது நல்லது.
-
அடுத்த 1 மணி நேரம் உஷார்! கோவை டூ கன்னியாகுமரி.. 12 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை! -
சென்னையை சுத்து போட்ட மழை மேகங்கள்.. நள்ளிரவு முழுக்க 15 மாவட்டங்களில் கொட்டும் மழை -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
டமால் டுமீல் தான்.. 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகுது கனமழை! மார்க் செய்த வானிலை ஆய்வு மையம்! -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட்












Click it and Unblock the Notifications