சல சல சலன்னு கொட்டப்போகும் மழை.. அடுத்த 3 மணி நேரம் அலர்ட்! 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு
சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரம் 3 மாவட்டங்களில் மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இது குறித்து வெளியான அறிக்கையில், "இன்று மதியம் 1 மணிக்குள் தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைகாலிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சில இடங்களில் மழையால் தண்ணீர் தேங்கலாம். சாலைகள் வழுக்கும் தன்மையுடன் இருக்கும். சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படலாம். பழுதான கட்டிடங்கள் சேதமாவதற்கான வாய்ப்புகள் உள்ளன." என்று எச்சரிக்கப்பட்டு இருக்கிறது.

முன்னதாக வெளியான அறிவிப்பில், "தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று வடமேற்கு திசையில் நகர்ந்து, அதே பகுதிகளில் நிலவி வருகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவக்கூடும்.
ஜனவரி 2 ஆம் தேதியான இன்று தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்பு உள்ளது. நாளை முதல் ஜனவரி 5 ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜனவரி 6 ஆம் தேதி ஜனவரி 7 ஆம் தேதிகளில் தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன் அறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரத்தில் லேசான பனி மூட்டம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. அதிக பட்ச வெப்ப நிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்த பட்ச வெப்பநிலை 21 - 22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்ப நிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்ப நிலை 21-22 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்." என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications