இந்த படத்தை பாருங்க.. சென்னையில் அடுத்து மழை எப்படி இருக்க போகுதுன்னு தெரியும்
சென்னை: சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி,பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை, கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம் என பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் அடுத்த சில மணி நேரம் மழை எப்படி இருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா ராமசாமி விளக்கியுள்ளார்.
தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து வட தமிழகம், ஆந்திர கடல் பகுதியை நெருங்க போகிறது. இந்த நிகழ்வு இன்று தொடங்கி அடுத்த இரண்டு நாளில் நடக்க போகிறது. இதன் காரணமாக மழை அதிகமாக இருக்கும் என வானிலை மையம் எச்சரித்திருந்தது. புதன்கிழமையான நாளை சிவப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அனைத்து பகுதிகளிலும் 20 செ.மீட்டர் மழை பெய்யும் என்பது கிடையாது என்றும் ஒவ்வொரு பகுதிகளிலும் மழை அளவு மாறுபடும் என்றும் வானிலை மையம் விளக்கம் அளித்தது. அதேநேரம் நடப்பாண்டு, வடகிழக்கு பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யக்கூடும் என்றும் கூறியிருந்தது.

இதன் காரணமாக தமிழகத்தில் மேல் வளிமண்டல சுழற்சிகள் உருவாகிறது. இதனால், ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பொதுவாக, வடகிழக்கு பருவமழை காலத்தில் மாலை, இரவு மற்றும் அதிகாலை நேரங்களிலேயே அதிக மழை காணப்படும். அந்த வகையில் நேற்று இரவு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கனமழை பெய்தது. இன்று காலை முதல் விடிய விடிய பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தற்போது பிற்பகல் நிலவலரப்படி, சென்னை முழுக்க பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக வேளச்சேரி, பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், பெருங்குடி, துரைப்பாக்கம், அடையாறு, திருவான்மியூர், கிண்டி,பல்லாவரம், தாம்பரம், முடிச்சூர், குரோம்பேட்டை, கீழ்கட்டளை, கோவிலம்பாக்கம் உள்பட தென்சென்னையின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. ஓஎம்ஆர் சாலை, கந்தன்சாவடி, வேளச்சேரி சாலை என பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி வருகிறது. மக்கள் மழையை பொருட்படுத்தாமல் அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவிக்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் தென்சென்னையின் பல பகுதிகளில் பால், காய்கறி உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இது ஒருபுறம் எனில் மழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை வெதர் குறித்து தனியார் வானிலை ஆய்வாளர் ராஜா ராமசாமி வெளியிட்ட பதிவில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் அதில் ஒரு மணி நிலவரப்படி,குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி சென்னை கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. காற்றின் ஒருங்கிணைப்பு இப்போது சரியாக இருக்கிறது. அடுத்த மழை சென்னையை நெருங்குகிறது என்று கூறியிருந்தார்.

1.30 மணி நிலவரப்படி, தென்சென்னை பகுதி முழுவதும் மிக கனமழை பெய்து வருகிறது. வடசென்னை மற்றும் சென்னையின் உள்பகுதிகளில் கொஞ்சம் ஓய்வு கிடைத்துள்ளது என்று கூறினார். வானிலை ஆய்வாளர் ராஜா ராமசாமி வெளியிட்ட மற்றொரு பதிவில், இந்திய வானிலை ஆய்வு மையம், ஆரஞ்சு அலர்ட்டை இன்று ரெட் அலர்ட் நிலைக்கு மாற்றி உள்ளது. ஏனெனில் காற்றழுத்த தாழ்வு நிலை சென்னை கடற்கரைக்கு அருகில் நகர்ந்து வருகிறது. மழை மேகங்கள் தொடர்ந்து உருவாகிக்கொண்டே இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை












Click it and Unblock the Notifications