சென்னை புயல் வெள்ள பாதிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு ராகுல் இரங்கல்- காங்கிரசாருக்கு வேண்டுகோள்!
சென்னை: மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பில் பலியானோர் குடும்பங்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். புயல் பாதித்த மாநிலங்களில் மாநில அரசுகளுடன் காங்கிரசார் இணைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் சென்னை அருகே 30 மணிநேரம் நிலை கொண்டு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பெருமழையை கொட்டியது. 48 மணிநேரத்தில் 40 செமீ மழையை கொட்டித் தீர்த்தது மிக்ஜாம் புயல்.

இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மிக கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகள் பெருமளவு வெள்ளத்தில் மூழ்கின. இன்று காலை முதல் இயல்பு நிலை திரும்பி வருகிறது.
மிக்ஜாம் புயல் வெள்ள பாதிப்பால் தமிழ்நாட்டில் 8 பேர் பலியாகி இருக்கின்றனர். புயல் வெள்ளத்தில் பலியானோர் குடும்பங்களுக்கு மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் தமிழ்நாடு, ஆந்திர, ஒடிஷா மாநிலங்களில் புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுகளுடன் இணைந்து காங்கிரஸ் கட்சியினர் செயல்பட வேண்டும் எனவும் ராகுல் காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Distressed by the news of the destruction and deaths caused by Cyclone Michaung in Tamil Nadu.
— Rahul Gandhi (@RahulGandhi) December 5, 2023
My heartfelt condolences to those who have lost their loved ones.
As the cyclone advances, I urge Congress leaders and workers of TN, Andhra Pradesh and Odisha, to extend all…
முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேற்று தொடர்பு கொண்டு புயல் வெள்ள பாதிப்பு நிலவரங்களைக் கேட்டறிந்தார்.
இதேபோல காங்கிரஸ் கமிட்டியின் அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவும் புயல் வெள்ள பாதிப்பு பகுதிகளில் மீட்பு, நிவாரணப் பகுதிகளில் காங்கிரசார் ஈடுபட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளார்.
-
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான்












Click it and Unblock the Notifications