நாகை டூ நெல்லை வரை.. 18 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் மழை.. லிஸ்ட்ல உங்க மாவட்டம் இருக்கா
சென்னை: தமிழ்நாட்டில் இன்று நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று மார்ச் 1 ஆம் தேதி தமிழகத்தில் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றுசுழற்சி மற்றும் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் தென்மாவட்டங்கள் மற்றும் வடமாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் மாா்ச் 1 முதல் 3-ஆம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதில் மாா்ச் 1 இல் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகா் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் மாா்ச் 1 இல் அதிகபட்ச வெப்பநிலை 89 டிகிரி இருக்கும். மாா்ச் 1 -ஆம் தேதி தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் இன்று நாகை, திருவாரூர், ராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், மயிலாடுதுறை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யவுள்ள வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் நாகப்பட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஆகிய தமிழகத்தில் 18 மாவட்டங்களில் காலை 10 மணி வரை வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலை ஒட்டிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications