தீபாவளிக்கு ஊருக்கு கிளம்புறீங்களா? சென்னை, செங்கல்பட்டில் இரவு வரை மழை வெளுக்கும்.. கவனம் மக்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க திட்டமிட்டுள்ளனர். பெரும்பாலான மக்கள் இன்று வியாழக்கிழமையே சொந்த ஊர்களுக்கு கிளம்ப ஆரம்பித்துவிட்டனர். இந்த சூழலில் தான் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலே மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை என்றால் தீபாவளி தான். வயது வேறுபாடு இல்லாமல்.. சாதி மத பேதமில்லாமல் இந்தியாவில் உள்ள கிட்டத்தட்ட அனைவரும் கொண்டாடும் பண்டிகையாக தீபாவளி இருக்கிறது. இந்தாண்டு வரும் நவம்பர் 8ம் தேதி தீபாவளி பண்டிகை வருகிறது.

Rain Alert

சென்னை மக்களே அலர்ட்

தீபாவளி நாளில் எப்போதுமே பொதுமக்கள் சொந்த ஊர்களில் தான் விரும்புவார்கள். நாளை வெள்ளிக்கிழமை ஊருக்கு கிளம்பினால் டிராபிக் பாதிப்பு அதிகரிக்கும் என்பதால் கணிசமானோர் இன்று வியாழக்கிழமையே சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு கிளம்பிவிடுவார்கள். இதற்கிடையே 26 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

26 மாவட்டங்களில் மழை

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து ஏராளமான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணிக்க தயாராகி வரும் நிலையில், தமிழகத்தின் 26 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது.. குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதால், இரவு நேர பயணத்தை மேற்கொள்ளும் மக்கள் கவனமாக இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் சென்னை, செங்கல்பட்டு, தருமபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல் கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், ராமநாதபுரம், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது..

மக்களே கவனம்

மேலும் சேலம், தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவாரூர், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களிலும் மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. திருச்சிராப்பள்ளி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களிலும் இரண்டு மணி நேரத்திற்கு மழை கொட்டும் என கூறப்பட்டுள்ளது. இதுதவிர புதுச்சேரி பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மழையால் சில பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கக்கூடும். மழை காரணமாக சாலைகள் வழுக்கும் தன்மையுடன் காணப்படவும் வாய்ப்புள்ளது. இதனால் வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்படுவதுடன், சில இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்படலாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

தீபாவளியை முன்னிட்டு ஏற்கெனவே பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் முக்கிய சாலைகளில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த மழை அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக சொந்த வாகனங்களில் நீண்ட தூரம் பயணிப்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செல்ல வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+