காலையிலேயே கண்ணைக் கட்டும் மழை.. 19 மாவட்டங்களில் ரெடியான வருண பகவான்! குடையை மறக்காதீங்க மக்களே!
சென்னை : கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஓரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தமிழகத்தில் அதிகாலையில் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அந்த பகுதிகளில் இடியுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யுமென கணிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாத தொடக்கத்தில் ஏப்ரல் - மே மாதங்களுக்கு இணையாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் மக்கள் கடும் அவதியடைந்தனர். இந்நிலையில் தற்போது வெயிலின் தாக்கம் மெல்ல மெல்ல குறைந்து வருகிறது.

செப்டம்பர் இறுதி வாரத்தில் இருந்து மழை தொடங்கியிருக்கும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தினமும் மழை பெய்து வருகிறது. சென்னை தொடங்கி கன்னியாகுமரி வரை தினமும் ஒருமுறையாவது மழை பெய்கிறது.
குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியை ஒட்டியுள்ள பகுதிகளில் மழையின் தாக்கம் அதிகமாகவே இருக்கிறது. இந்நிலையில், கேரளா மற்றும் தென்தமிழகத்தின் மேல் ஓரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தமிழகத்தில் அதிகாலை முதல் 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி," இன்று தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாமக்கல், கரூர், பெரம்பலூர், நீலகிரி, ஈரோடு, சேலம், மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என கணிக்கப்பட்டிருக்கிறது. மேலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இதேபோல மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை தமிழகத்தில் ஓருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, கோயம்புத்தார். திருப்பர், தேனி, திண்டுக்கல், தென்காசி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஒருசில பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் உருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஓட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27" செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.
இன்று, தென்தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள கடலோர பகுதிகள் மற்றும் லட்சத் தீவு பகுதிகள், மாலத் தீவு பகுதிகள், தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக் கூடும். எனவே மீனவர்கள் இக்காலங்களில் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications