சூறையாடிய மழை வெள்ளம்.. உடைந்த பாலங்கள்.. சாலைகள்.. குடிநீர் விநியோகம் எப்போது? சிவ்தாஸ் மீனா அறிக்கை
திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் செயல்படுத்தப்படும் 120க்கும் மேற்பட்ட குடிநீர் திட்டங்களில் புயலால் பாதிப்படைந்த 45 கூட்டுக் குடிநீர் திட்டங்களை சரிசெய்யும் பணி நடைபெறுகிறது என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். 69 சிறுபாலங்கள் பாதிக்கப்பட்டதாகவும் 152 சாலைகள் தண்ணீரில் மூழ்கியதாகவும் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.
கடந்த வாரம் 17 மற்றும் 18 ஆம் தேதி பெய்த அதிகனமழை அதை தொடர்ந்து ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் நெல்லை , தூத்துக்குடி , தென்காசி , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. கால்நடைகள் உயிரிழந்தன. மக்களின் உடமைகள் முற்றிலும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வெள்ளம் வடிந்தாலும் மக்கள் அனைத்தையும் முற்றிலும் இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.

4 மாவட்டங்களில் நடைபெற்ற மீட்புப் பணிகள் குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அதிகனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணி நிறைவு பெற்றுள்ளது.
வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து 49,707 பேர் மீட்கப்பட்டனர். மாநில அரசின் அனைத்து நிறுவனங்கள் , தேசிய , மாநில பேரிடர் மீட்பு குழுவினர் , தீயணைப்பு , காவல்துறை , ராணுவம் , கடற்படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். காவல்துறையில் 1,500 பேர் , ராணுவம் , கடற்படை 168 பேர் என 3400 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 323 படகுகள் மீட்புப் பணிக்கு பயன்படுத்தப்பட்டன.
வெள்ளம் பாதித்த தென் மாவட்டங்களில் கூட்டுக் குடிநீர் திட்டங்களுக்கு ஆதாரம் தாமிரபரணி ஆறுதான். 120க்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் தாமிரபரணி ஆற்றில் செயல்படுத்தப்படுகிறது. அவற்றில் 64 திட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன. 23 திட்டங்கள் சரிசெய்யப்பட்டு, தற்போது 45 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் சரிசெய்யும் பணி நடைபெறுகிறது.
டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. 173 இடங்களில் நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்டது. அவற்றில் 136 இடங்களில் சாலைகள் சரிசெய்யப்பட்டன. 37 இடங்களில் பணிகள் நடைபெறுகிறது. 69 சிறுபாலங்கள் பாதிப்பு, 56 சரிசெய்யப்பட்டுள்ளது. 13 பாலங்களில் சீரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன.
152 சாலைகள் தண்ணீரில் மூழ்கின, அவற்றில் 35 இடங்கள் சரிசெய்யப்பட உள்ளன. 600 இடங்களில் நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டு, 500 இடங்களில் உடைப்பை சரிசெய்யும் பணிகள் நடைபெறுகிறது. 100 இடங்களில் சரிசெய்யப்பட்டு விட்டது. 1.83 லட்சம் ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கின.
சேதங்கள் குறித்த கணக்கெடுப்பு பணியை விரைந்து மேற்கொள்ள கூடுதலாக பணியாளர்கள் வருவாய் , வேளாண் , கால்நடை , மீன்வளதுறையில் அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை முதல் கணக்கெடுப்புப் பணி தொடங்கியது. சேதங்கள் கணக்கிடப்பட்டு விரைவில் நிவாரணம் வழங்கப்படும் என்றும் சிவ்தாஸ் மீனா கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications