டெல்டா தான் டார்கெட்.. இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யுமாம் - வானிலை அறிவிப்பு
சென்னை: தமிழ்நாட்டில் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக மழை இல்லாத நிலை இருந்தது. தற்போது ஆங்காங்கே மழை பெய்ய தொடங்கி உள்ளது. நேற்று இரவு சென்னை புறநகர் பகுதிகளில் பல இடங்களில் மழை பெய்தது. மேலும் தமிழகத்தில் டெல்டா மற்றும் தென்மாவட்டங்களில் மழைபெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தான் இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதவிர காரைக்காலில் சில இடங்களிலும் மழை பெய்ய சான்ஸ் உள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக தமிழகத்தின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இதற்கிடையே தான் காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications