இது வெறும் ட்ரைய்லர் தான் போல.. அடுத்த 10 நாள் மழை கொட்ட போகுது.. பெரிய லிஸ்ட்டை கொடுத்த வெதர்மேன்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் குறைந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தமிழகத்திற்கு இன்னும் எத்தனை நாட்கள் மழை தொடரும்.. இன்று எங்கெல்லாம் மழை பெய்யும்.. சென்னையில் எப்போது மழை இருக்கும் என்பது குறித்த தகவல்களை தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
பருவமழை சீசனுக்கு பிறகு தமிழ்நாட்டில் மழை இல்லாமல் இருந்தது. பிப்ரவரி மாதமே வெப்பம் அதிகரித்துவிட்ட நிலையில், பல இடங்களில் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர். மதிய நேரங்களில் பொதுமக்களால் வெளியே கூட செல்ல முடியாத சூழலே இருந்தது.

வெதர்மேன் பிரதீப் ஜான்
ஆனால், ஏப்ரல் மாதம் தொடங்கியது முதலே வானிலை மெல்ல மாறி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக மாநிலத்தில் பல்வேறு இடங்களிலும் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான ஒரு வானிலையே நிலவி வருகிறது. இதற்கிடையே தமிழகத்தில் எவ்வளவு காலம் மழை தொடரும்.. எங்கெல்லாம் மழை என்பது குறித்த தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் பகிர்ந்துள்ளார்.
எங்கே மழை
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "இதுவரை கோடை இல்லாத ஏப்ரல் மாதமாகவே இது இருந்துள்ளது. அடுத்த 10 நாட்களுக்கும் இதே போக்கு தான் தொடரும். கன்னியாகுமரியில் வெப்பத்தை கட்டுக்குள் வைத்திருக்கும் வகையில் அங்கு மீண்டும் மழை பெய்துள்ளது. அங்கு தான் அதிக மழை பெய்துள்ளது. ஆனால், மழை இன்னும் முடிவடையவில்லை. அடுத்த 10 நாட்களுக்கு மழை பெய்யும் என்று எதிர்பார்க்கிறோம்.
பெரிய லிஸ்ட்
தமிழ்நாடு முழுவதும் இன்றும் பரவலாக இடியுடன் கூடிய மழை பெய்யும். சேலம், நாமக்கல், திருச்சி, கரூர், திண்டுக்கல், ஈரோடு, கோயம்புத்தூர், தேனி, தென்காசி, மதுரை, தூத்துக்குடி (உள்பகுதிகள்), சிவகங்கை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி ஆகிய இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சில இடங்களில் பலத்த மழை கூட பெய்யும். ஒரு சுவாரஸ்யமான நாள் தான். சென்னையை பொறுத்தவரை வரும் ஏப்ரல் 9 முதல் 11ஆம் தேதிகளில் மழை பெய்யும். சென்னை மிகவும் ஈரப்பதமாக இருக்கும். எனவே அதிக தண்ணீர் குடிப்பதை மறக்க வேண்டாம்" என்று பதிவிட்டுள்ளார்.
வானிலை மையம்
முன்னதாக இன்று வானிலை மையம் வெளியிட்டிருந்த செய்திக்குறிப்பில், "தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்தில் தென் வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக்கூடும். தென்தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை கிளைமேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று கூறப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications