"அடுத்த ஒரு வாரம்.." தமிழகத்திற்கு நல்ல மழை இருக்கு! சென்னை கிளைமேட் என்ன! வானிலை மையம் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே வறண்ட வானிலை நிலவும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது,
தமிழ்நாட்டில் கடந்த பருவமழை காலத்தில் ஓரளவுக்கு நல்ல மழை பெய்தது. ஆனால், அதன் பிறகு மாநிலத்தில் வறண்ட ஒரு வானிலையே நிலவி வந்தது. பொதுவாக ஏப்ரல் மாதம் தான் வெயில் உச்சத்தைத் தொடும்.

ஆனால், இந்த முறை பிப். மாதமே வெப்பம் அதிகமாக இருந்து வருகிறது. கரூர், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தொடர்ச்சியாக அதிகபட்ச வெப்பம் பதிவாகி வருகிறது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் கரூர் பரமத்தியில் தான் அதிகபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது. அங்கே 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
கடும் வெப்பம்: கடந்த 24 மணி நேரத்தில் கரூர், மதுரை, ராமநாதபுரம், சென்னை, ஈரோடு, நாகப்பட்டினம், திருச்சி, திருவள்ளூர், வேலூர் மாவட்டங்களில் வெப்பம் இயல்பைக் காட்டிலும் அதிகமாகப் பதிவாகியுள்ளது. இதற்கிடையே வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்த தகவல்களை வானிலை மையம் பகிர்ந்துள்ளது.
தமிழ்நாடு வானிலை: இது தொடர்பாக வானிலை மையம் பகிர்ந்துள்ள செய்திக்குறிப்பில், "தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று பிப். 23ஆம் தேதி தென்தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப்பகுதிகள் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
பிப். 24 மற்றும் பிப். 25 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
மழை இருக்கு: மேலும், பிப். 26 முதல் பிப். 28 வரையிலான தேதிகளில் தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். இன்று பிப்.29ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்
சென்னை கிளைமேட்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிக்குடி, கொடுமுடியாறு அணைப் பகுதியில் கணிசமாக மழை பெய்துள்ளது. அதேநேரம் மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுமில்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications