சென்னையில் இனி வெளுக்கப் போகுது.. ஆரம்பிச்சது மழை.. 6 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் இனி அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. குறிப்பாக 15 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம். ராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது.
தமிழகத்தில் கடந்த 10 நாட்களாகவே படிப்படியாக வெப்பம் அதிகரித்து வருகிறது. அதற்கு முன்பு கோவை, நீலகிரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் நேற்று மாலை முதல் பெய்ய தொடங்கியுள்ளது. இதற்கிடையே இன்று வானிலை மையமும் ஈ தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு மழை இருக்கும் என்றும், சென்னையில் கனமழை கொட்டும் என்றும் குறியுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

அடுத்த ஒரு வார அப்டேட்:
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, 13-07-2025 மற்றும் 14-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
15-07-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையில் கனமழை பெய்யும்
15-07-2025 மற்றும் 17-07-2625: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர் காஞ்சிபுரம். இராணிப்பேட்டை, நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
18-07-2025 மற்றும் 19-07-2025. தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர மாவட்டத்தின் மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
13-07-2025 மற்றும் 14-07-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.
இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு - 13-07-2025 மற்றும் 14-07-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4* செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
13-07-2025 மற்றும் 14-07-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசெளகரியம் ஏற்படலாம்.
சென்னையில் இன்று எப்படி?
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை இன்று (13-07-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
சென்னையில் நாளை (14-07-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: 13-07-2025 முதல் 16-07-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17-07-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக் கடல் பகுதிகள்:
13-07-2025: வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல், தெற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
14-07-2025 முதல் 16-07-2025 வரை: தென்மேற்கு மற்றும் மத்தியமேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள் மற்றும் தெற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
17-07-2025: தெற்கு அந்தமான் கடல் மற்றும் தென்மேற்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
13-07-2025: மத்திய மேற்கு அரபிக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக் கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 G... மீட்டர் வேகத்திலும், தென்மேற்கு மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், லட்சத்தீவு மற்றும் கேரள கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
1. 07 1025: மத்தியமேற்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு முதல்
கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், தெற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
15-07-2025: மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு-மத்தியமேற்கு அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா கர்நாடகா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
16-07-2025 மற்றும் 17-07-2025: மத்தியமேற்கு, அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தெற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், மத்தியமேற்கு, அதனை ஒட்டிய தெற்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
மழை அளவு (செமீ):
மண்டலம் 11 வளசரவாக்கம் (சென்னை), மண்டலம் 09 ஐஸ் ஹவுஸ் (சென்னை), மண்டலம் 11 நெற்குன்றம் (சென்னை), மண்டலம் 10 சைதாப்பேட்டை (சென்னை) தலா 4, மண்டலம் 10 வடபழநி (சென்னை) மண்டலம் 18 அமைந்தக்கரை (சென்னை) பூந்தமல்லி ARG (திருவள்ளூர்), மண்டலம் 05 சென்னை சென்ட்ரல் (சென்னை) ACSமருத்துவக்கல்லூரி ARG (காஞ்சிபுரம்). YMCA நந்தனம் ARG (சென்னை) எம்ஜிஆர் நகர் (சென்னை), சென்னை (N) AWS (சென்னை), சென்னை நுங்கம்பாக்கம் (சென்னை) பூந்தமல்லி (திருவள்ளூர்) தலா 3.
சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை). டிஜிபி அலுவலகம் (சென்னை) சென்னை ஆட்சியர் அலுவலகம் (சென்னை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை) . அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), பார்வூட் (நீலகிரி) . அண்ணா பல்கலைக்கழகம் ARG (சென்னை), மண்டலம் 07 கொரட்டூர் (சென்னை) தலா 2 செமீ மழை பெய்துள்ளது.












Click it and Unblock the Notifications