ஆடி வந்தாலும் அடி கன்ஃபார்ம்..வெளுக்கப் போகுது மழை! குடையோட ரெடியா இருங்க மக்களே! மெட் சொன்ன அப்டேட்
சென்னை: தமிழகத்தில் 13ம் தேதி வரை மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. குறிப்பாக இன்று தமிழகத்தில் திருவள்ளூர், கோவை, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கணித்துள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை ஆடி மாதத்தில் அதாவது ஜூலை 15ஆம் தேதிக்கு பிறகு ஆடிக் காற்று துவங்கும். அப்போது கனமழைக்கும் வாய்ப்பு இருக்கும். ஆனால் ஜனவரி மாதத்தில் இருந்தே வானிலையில் பெரும் வேறுபாடு காணப்படுகிறது.
பிப்ரவரி மாதத்தில் இதுவரை இல்லாத அளவு வெயில் பதிவான நிலையில், வெப்பம் உச்சத்தை தொடும், ஏப்ரல் மே மாதங்களில் அடிக்கடி மழை பெய்து மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது. இனி தொடர்ந்து மழைக் காலம் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜூன் மாதம் முழுவதும் மிகக் கடுமையான வெயில் கொளுத்தியது.

பருவமழையும் கை கொடுக்காத நிலையில் தற்போது வழக்கம் போல் அக்டோபர் நவம்பர் மாதங்களில் தான் மழை பெய்யுமா என மக்கள் கேட்கத் தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் ஆடி மாதம் தொடங்க இருக்கும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தற்போதைய பலத்த காற்று வீச தொடங்கி விட்டது. ஆனால் உள் மாவட்டங்களில் மிகக் கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. தற்போதைய சூழலில் தேனி, நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்கிறது.
வட மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இன்றும் 13 ஆம் தேதி வரையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி இருக்கிறது. குறிப்பாக இன்று திருவள்ளூர், கோவை, தென்காசி, கன்னியாகுமரி, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என கூறி இருக்கிறது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-4° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38-39° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என கூறியுள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா?












Click it and Unblock the Notifications