இன்னும் 6 நாட்களுக்கு மழை கொட்டப்போகுது.. பனிமூட்டம் எப்படி இருக்கும்? வானிலை ஆய்வு மையம் அலர்ட்!
சென்னை: தமிழகத்தில் வரும் மாா்ச் 5 வரை லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை மையம், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அடுத்த 6 நாட்களுக்கு லேசான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழக கடலோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் இன்று லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் குறிப்பிடத்தக்க மாற்றதிற்கான வாய்ப்பு குறைவு, எனினும் சற்று உயரக்கூடும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
அதேபோல், சென்னையில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேலும், அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளது. மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை ஏதும் விடுக்கவில்லை.
மழை அளவு: தமிழகத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிந்த கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தென்காசி மாவட்டம், ஆய்க்குடி பகுதியில் 70 மி.மீ. மழை பதிவானது. குண்டாறு அணை (தென்காசி), உபாசி (கோவை), வால்பாறை(கோவை), செங்கோட்டை (தென்காசி), ராமநதி அணைப் பகுதி (தென்காசி)-தலா 40 மி.மீ, தென்காசி (தென்காசி), மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), தொண்டாமுத்தூர் (கோவை), பாலமோர் (கன்னியாகுமரி)- தலா 30 மி.மீ, கவுந்தப்பாடி (ஈரோடு), சுருளக்கோடு (கன்னியாகுமரி), காங்கேயம் (திருப்பூர்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு)- தலா 20 மி.மீ. மழை பதிவானது.












Click it and Unblock the Notifications