மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்த மழை.. இன்று 9 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. கோவை, நீலகிரிக்கு ஆரஞ்சு அலர்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் மீண்டும் ஒரு ரவுண்ட் மழை வெளுக்கப் போகிறது என்றே வானிலை மையம் அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. நேற்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்த நிலையில் இன்று சென்னையில் பரவலாக மழை பெய்தது. இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 9 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கும் எனவும், குறிப்பாக கோவை, நீலகிரியில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக ஆரஞ்சு நிற எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதத்தை விட நடப்பு ஆகஸ்டு மாதத்தில் மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை மையம் கூறியது. நேற்று மற்றும் நேற்று முன் தினம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. இன்றும் சென்னையில் மழை கொட்டியது. மதிய நேரங்களில் சென்னையில் பரவலாக மழை பெய்தது.

rain-returns-heavy-showers-forecast-in-9-districts-today-orange-alert-for-coimbatore-nilgiris

இன்று 9 மாவட்டங்களில் கனமழை கொட்டும்

இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்த ஒரு வாரம் எப்படி இருக்கும், இன்று தமிழகத்தில் எங்கெல்லாம் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. குமரி கடலை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

இன்று எங்கெல்லாம் கனமழை பெய்யும்?

குறிப்பாக கோவை மற்றும் நீலகிரியில் இடி மின்னலுடன் இன்று கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இதேபோல் தேனி, தென்காசி, நெல்லை, குமரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 10 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நாளை 4 ஆம் தேதி தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

கோவை, நீலகிரியில் அதி கனமழை பெய்யும்

05-08-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மாவட்டம் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம். திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

06-08-2025: தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

9 ஆம் தேதி வரை மழை தான்

07-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

08-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 09-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று எப்படி?

இன்று (03-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (04-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மழை அளவு (செமீ)

* புதுக்கோட்டை 14 செமீ, திருமயம் (புதுக்கோட்டை) 12செமீ, (புதுக்கோட்டை), காரையூர் குடிமியான்மலை (கோயம்புத்தூர்) தலா 11, (புதுக்கோட்டை). சின்னக்கல்லார் அன்னவாசல் (புதுக்கோட்டை), துவாக்குடி IMTI (திருச்சிராப்பள்ளி), பெருங்களூர் (புதுக்கோட்டை), செங்கம் (திருவண்ணாமலை) தலா 8 செமீ.

* வால்பாறை PTO (கோயம்புத்தூர்). உபாசி TRF AWS (கோயம்புத்தூர்). அரிமளம் (புதுக்கோட்டை), ஜமுனாமரத்தூர் (திருவண்ணாமலை), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), கிளானிலை (புதுக்கோட்டை), சின்கோனா (கோயம்புத்தூர்). அறந்தாங்கி (புதுக்கோட்டை) தலா 7.

* திருவண்ணாமலை AWS (திருவண்ணாமலை), சிங்கம்புணரி (சிவகங்கை), ஆரணி (திருவண்ணாமலை), ஆலங்குடி (புதுக்கோட்டை), வால்பாறை PAP (கோயம்புத்தூர்) தலா 6 செமீ, வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), நாகுடி (புதுக்கோட்டை), DSCL எறையூர் (கள்ளக்குறிச்சி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்), கீரனூர் (புதுக்கோட்டை), உடையாளிபட்டி (புதுக்கோட்டை) தலா 5 செமீ,

* இளையாங்குடி (சிவகங்கை), வெட்டிக்காடு (தஞ்சாவூர்), சிவகங்கை (சிவகங்கை). சோலையார் (கோயம்புத்தூர்), தீர்த்தாண்டதானம் (ராமநாதபுரம்), ஆதனக்கோட்டை (புதுக்கோட்டை), BASL வெங்கூர் (கள்ளக்குறிச்சி), BASL மணலூர்பேட்டை (கள்ளக்குறிச்சி). RSCL-2 சூரப்பட்டு (விழுப்புரம்). DSCL திருப்பாலபந்தல் (கள்ளக்குறிச்சி), காரைக்குடி (சிவகங்கை), வட்டானம் (ராமநாதபுரம்) தலா 4 செமீ மழை பெய்துள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்: 03-08-2025 முதல் 06-08-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

07-08-2025: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:

03-08-2025: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04-08-2025: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05-08-2025 மற்றும் 06-08-2025: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

7-08-2025: தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் தென்மேற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அரபிக்கடல் பகுதிகள்:

03-08-2025: மத்தியமேற்கு மற்றும் தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு, தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

04-08-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

05-08-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல், வடமேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

06-08-2025 மற்றும் 07-08-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், வடமேற்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகள், தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், மத்தியகிழக்கு அரபிக்கடல், தென்மேற்கு, தென்கிழக்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகள், கர்நாடகா-கேரளா கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+