சென்னையில் காலை 10 மணிக்கு ஆரம்பித்த மழை.. நேரம் செல்ல செல்ல அடியோடு மாறுதே வானிலை
சென்னை: சென்னையில் இன்று காலை 10 மணி அளவில் லேசான சாரலாகவே மழை ஆரம்பித்தது. மிகவும் மிதமான சாரல் மழையே பிற்பகல் 3 மணி வரையிலும் பெய்து கொண்டிருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. சாரல் மழை அடை மழையாக கொட்டி வருகிறது. சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்கள் அவதிப்படுகிறார்கள்.
தெற்கு வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டு இருந்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர இருக்கிறது.

முன்னதாக இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் வரை வலுப்பெறக்கூடும் என கணிக்கப்பட்ட நிலையில், தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக தமிழக கடலோரப் பகுதிகளை அடைய உள்ளது. இதன் காரணமாக இன்றும், நாளையும் வட கடலோர மாவட்டங்களில் பரவலாக நல்ல மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், தமிழ்நாட்டில் இதர பகுதிகளிலும் மழை பெய்வதற்கான சூழல் உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்கள், புதுச்சேரியில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது. வானிலை மையத்தின் கணிப்பின்படியே மேககூட்டங்கள் சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர், உள்ளிட்ட மாவட்டங்களில் மெல்ல மெல்ல நகரத்தொடங்கியது.
மழை மேகங்கள் காரணமாக காலை 10 மணிக்கு தொடங்கிய மழை, முதலில் லேசான மழையே பெய்தது. இந்த மழை மேலே மொட்டை மாடிகளில் துணி காயப்போடுவரை எச்சரிக்கும் வகையில் இருந்தது. அதன்பிறகு சற்று மழை தடித்தது. ஆனால் பயப்படும் வகையில் மழை இல்லை.. மிதமான சாரலாக மழை சென்னையில் பிற்பகல் 3 மணி வரை தொடர்ந்து கொண்டிருந்தது. ஆனால் நேரம் செல்ல செல்ல மழையின் வேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மிதமான மழை தற்போது அடைமழையாக மாறியிருக்கிறது... வட சென்னை பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்க தொடங்கி உள்ளது. மழையின் வேகம் தீவிரமாகி வருகிறது. அதேநேரம் தென்சென்னை பகுதிகளில் மிதமான மழைதான் பெய்து வருகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications