சென்னைக்கு வெளியே நிலைமை மோசம்.. மழைநீர் வடியாமல் தவிக்கும் மேற்கு தாம்பரம், முடிச்சூர் பகுதி மக்கள்
செங்கல்பட்டு: தாம்பரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்னும் பெரும்பாலான இடங்களில் மழைநீர் வடியாமல் உள்ளதால், பொதுமக்கள் தத்தளித்து வருகின்றனர். ஏராளமான வீடுகளில் தரைத்தளம் மூழ்கியுள்ளது.
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. நேற்று முன் தினம் இரவு முதல் நேற்று இரவு வரை விடாமல் கொட்டிய கனமழையால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக மாறி உள்ளன. சாலையில் மழைநீர் இடுப்பளவுக்கு தேங்கி இருப்பதனால் பல இடங்களில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன.

சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகளில், குறிப்பாக பிரதான சாலைகளில் வெள்ள நீர் முற்றிலுமாக வடிந்துவிட்டது. உட்புற சாலைகள், மற்றும் மிகவும் தாழ்வான பகுதிகளில் இன்னும் மழைநீர் தேங்கியுள்ளது. அங்கும் மழைநீரை வடியச் செய்வதற்கான முயற்சிகளால் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதேசமயம், தாம்பரம், முடிச்சூர், மீஞ்சூர் என சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் நிலைமை இன்னும் மிக மோசமாக உள்ளது. முடிச்சூர் பகுதிகளில் இன்னும் இடுப்பளவுக்கு மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் மழைநீர் புகுந்த நிலையில், இன்னும் மழைநீர் மட்டம் குறையாமல் இருந்து வருகிறது. மழை ஓய்ந்தும், வெள்ள நீர் குறையாமல் இருந்து வருவதால் அப்பகுதி மக்கள் கடுமையான இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.
அதேபோல, மேற்கு தாம்பரம் பகுதியில் தரைத்தளத்தில் இருக்கும் வீடுகளை மழைநீர் மூழ்கடித்துள்ளது. புறநகர் பகுதி மக்களை, அரசு கண்டுகொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. தற்போது, பேரிடர் மீட்புப் படையினர் இப்பகுதியில் உள்ளவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மேலும், தாம்பரம், செங்கல்பட்டு, முடிச்சூர், பெரும்பாக்கம் மக்கள் அவசர உதவிக்கு தொடர்பு கொள்ள அலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 9445000953, 9788662991, 9941562550, 9159369755 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனினும், ஏராளமானோர், செல்போன்களை வெள்ளத்தில் இழந்து, வெளியிலும் வர முடியாமல் வீடுகளுக்குள் சிக்கியுள்ளதால் மோசமான சூழல் நிலவுகிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications