சடசடன்னு வெடிச்சு கொட்ட போகுது மழை.. ஏற்கனவே வங்கக்கடலில் சூறாவளி.. இப்ப இது வேறயா? வானிலை அலர்ட்
சென்னை: வருகிற ஜூலை 10ம் தேதி வரை தமிழகத்தில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்த நிலையில், இன்றும், நாளையும் கனமழை பெய்யக்கூடும் என்று மீண்டும் தெரிவித்திருக்கிறது.
கடந்த 4 நாட்களுக்கு முன்பு, ஜூலை 5ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஏற்கனவே வானிலை மையம் அறிவித்திருந்தது.

ஜூலை 10 வரை : பிறகு நேற்று முன்தினம் மீண்டும் வெளியான அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழ்நாட்டில் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், அதன்படி, ஜூலை 5 முதல் ஜூலை 10ஆம் தேதி வரை தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
அந்தவகையில் இன்றைய தினம் அதாவது 6ம் தேதி மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.. தெற்கு மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே SS கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் அறிவிப்பு: இந்நிலையில், நேற்று மாலை சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் உள்ளதாவது: தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக குறைந்து வருகிறது.
மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு காணப்படுவதால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் அடுத்த இரண்டு நாட்களுக்கு இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஜூலை 11 வரை தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம்.
2 நாட்கள் மழை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 55 கி.மீ., வேகத்திலும்; அவ்வப்போது 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும்.தெற்கு, மத்திய மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள், வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ., வேகத்திலும்; அவ்வப்போது 55 கி.மீ., வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications