சென்னை உள்பட 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை விடவே விடாது- வானிலை மையம்
சென்னை: சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது காலை 10 மணி வரை மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது போல் 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் வானிலை மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் நேற்று மாலை முதலே கனமழை பெய்தது. பயங்கர காற்றுடன் மழை பெய்த நிலையில் இடி மின்னலும் இருந்தது.

நேற்று காலை முதல் வெயில் இருந்த நிலையில் மாலைக்கு மேல் மழையுடன் இடி, நல்ல தரைக் காற்று, மரங்கள் எல்லாம் வளையும் அளவுக்கு காற்று வீசியது.
சென்னை முகப்பேர், அமைந்தகரை, கோயம்பேடு, ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், மதுரவாயல், வளசரவாக்கம், விருகம்பாக்கம், பூந்தமல்லி, திருவேற்காடு, குன்றத்தூர், மாங்காடு, பட்டாபிராம், செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் அதிகாலை வரை விடிய விடிய மழை பெய்தது. சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சாலையில் தண்ணீர் தேங்கியுள்ளது. கிண்டி, அடையாறு, மயிலாப்பூர், வடபழனி, ஈக்காட்டுத்தாங்கல், அண்ணாசாலை, மந்தவெளி, லஸ், கோயம்பேடு, திநகர், முகப்பேர், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
அது போல் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, ஆவடி, அனகாபுத்தூர், குன்றத்தூர், மாங்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. நேற்று இரவு முதல் காலை 5.30 மணி வரை சோழிங்கநல்லூரில் அதிகபட்சமாக 9 செ.மீ. மழை பெய்துள்ளது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னையில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அது போல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
டெல்டாவில் கனமழை.. தஞ்சை, திருவாரூர் மக்கள் உஷார்! அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications