அடுத்த 3 மணி நேரம்.. சென்னை டூ நெல்லை வரை.. இடி, மின்னலுடன் 18 மாவட்டங்களில் கொட்டப் போகுது மழை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று பகல் நேரங்களில் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், அடுத்த 3 மணி நேரத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கூறியுள்ளது. தலைநகர் சென்னை, காஞ்சிபுரம், நெல்லை, விருந்துநகர், திருச்சி, நீலகிரி உள்பட 18 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய போவதாக வானிலை மையம் கூறியுள்ளது.

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் நேற்று மாலை மழை பெய்தது. இன்றும் கோவை, நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது. ஆனால் மற்ற மாவட்டங்களில் வெயில் வழக்கத்தை விட அதிகமாக வீசியது. நெல்லை மாவட்டத்தில் இன்று பகல் நேரங்களில் கடுமையான வெயில் கொளுத்தி எடுத்தது.

Rain Chennai

அடுத்த 3 மணி நேரம்

மாலை 4 மணிக்கு பிறகு மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இந்த நிலையில் தான் அடுத்த 3 மணி நேரம், அதாவது இன்று இரவு 7 மணி வரை இடி மின்னலுடன் கூடிய மழை கொட்டப் போவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

"சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கோவை, ஈரோடு, நீலகிரி, தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, சிவகங்கை, திருவாரூர், திருச்சி ஆகிய 18 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான இடி மற்றும் மின்னலுடன் கூடிய கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

முன்னதாக சென்னை வானிலை மையம் வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறப்பட்டிருந்ததாவது:- "நேற்று (26-08-2025) ஓரிசா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று (27-08-2025) காலை 05.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு-வடமேற்கு திசையில் ஒரிசாவை நோக்கி நகரக்கூடும்.

* 27-08-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் களமழை பெய்ய வாய்ப்புள்ளது.

பலத்த தரைக்காற்றுடன் கூடிய மழை

* 28-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

* 29-08-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.. நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
* 30-08-2025 முதல் 02-09-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு

சென்னையில் இன்று (27-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

சென்னையில் நாளை (28-08-2025) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 27-28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

தமிழக கடலோரப்பகுதிகள்:

* 27-08-2025 முதல் 28-08-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 29-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

* 30-08-2025: எச்சரிக்கை ஏதுமில்லை. 31-08-2025: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

பதிவான மழை அளவு (செமீ):

* தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) 4;
* தேவாலா (நீலகிரி) 3;
* அவலாஞ்சி (நீலகிரி), விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) தலா 2;
* கும்மிடிப்பூண்டி (திருவள்ளூர்), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), உபாசி TRF AWS (கோயம்புத்தூர்) தலா 1 செமீ மழை பெய்துள்ளது.

வெப்பநிலை நிலவரம்:

* அதிகபட்ச வெப்பநிலை:- மதுரை விமானநிலையம்: 39.5° செல்சியஸ்
* குறைந்தபட்ச வெப்பநிலை (சமவெளிப்பகுதிகளில்): கரூர் பரமத்தி: 21.0 செல்சியஸ் பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+