ரஜினிகாந்த் வீட்டை சூழ்ந்த வெள்ளம்.. போயஸ் கார்டன் நிலைமையை பாருங்க.. நாளை வேற மழை இருக்கே!
சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் இன்றும், நாளையும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னோட்டமாக நேற்று முதல் சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது. அதன்பிறகு இன்று காலையில் சற்று நின்ற மழை மீண்டும் 9 மணிக்கு பிறகு வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் சென்னையின் பல இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
கோயம்பேடு, வேளச்சேரி, பாரிமுனை, பல்லாவரம், வடபழனி, நுங்கம்பாக்கம், மீனம்பாக்கம், அடையாறு, கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம், எழும்பூர், அண்ணா நகர், திருமங்கலம், முகப்பேர் உள்ளிட்ட பல இடங்களில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

பல இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் உள்ளது. இந்த தண்ணீரில் தான் வாகனங்கள் ஊர்ந்து செல்வதோடு, பொதுமக்களும் தங்களின் அத்தியாவசிய தேவைகளுக்காக வீடுகளை விட்டு வெளியே வந்து செல்கின்றனர். சென்னை மாநகராட்சி சார்பில் மழைநீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. ஆனால் மழை நிற்காமல் பெய்வதால் அந்த பணியில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் வீட்டை மழைநீர் சூழ்ந்துள்ளது. வீட்டில் முன்பகுதியில் அதிகளவில் மழைநீர் தேங்கி உள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வீட்டின் முன்பு மழைநீர் தேங்குவது இது முதல் முறையல்ல. ஒவ்வொரு முறை சென்னையில் கனமழை, வெள்ளம் ஏற்படும்போதும் மற்ற ஏரியாக்களை போல் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் வீட்டின் முன்பும் தண்ணீர் தேங்குவது தொடர்ந்து வருகிறது.

மேலும் தற்போதைய வானிலை நிலவரத்தை பொறுத்தவரை சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த 4 மாவட்டங்களிலும் நேற்று முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும் தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில், குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நாளை சென்னையை நெருங்க உள்ளது. இதனால் சென்னையில் நாளை மிக கனமழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications