"ரெட் தக்காளிஸ்!" இன்று அடிச்சு துவைக்க போகுது மழை! சென்னை டூ கடலூர் சம்பவம் உறுதி! வெதர்மேன் அலர்ட்
சென்னை: தமிழ்நாட்டில் இந்த கோடைக் காலத்தில் வெப்பம் வழக்கத்தை விடச் சற்று குறைவாகவே இருக்கிறது. அவ்வப்போது மாநிலத்தில் பரவலாகப் பெய்யும் மழையே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. இதற்கிடையே இன்றைய தினம் தமிழ்நாட்டில் சென்னை முதல் கடலூர் வரை ரெட் தக்காளி மழைக்கு வாய்ப்பு இருப்பதாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரித்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த சில காலமாகவே கோடை வெயில் ஏப்ரல்- மே மாதங்களில் உச்சமடைவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தது. குறிப்பாக மே மாதம் வெப்பம் தான் வெப்பம் உச்சத்தைத் தொடும். ஆனால், இந்தாண்டு அதற்கு நேர்மாறான சூழலே நிலவுகிறது. கடந்த மாதம் வெப்பம் அதிகமாக இருந்த நிலையில், இந்த மாதம் மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

கொட்டும் மழை
அதிலும் குறிப்பாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய பிறகு மாநிலத்தில் பரவலாகவே மழை கொட்டி வருகிறது. இந்த எதிர்பார்க்காத மழையால் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களிலும் வெப்பம் கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் மக்கள் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர். இதற்கிடையே தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மழை வரும்.. என்ன கிளைமேட் இருக்கும் என்பது குறித்து தகவல்களை வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
தமிழ்நாடு வெதர்மேன்
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் தனது ட்விட்டர் பக்கத்தில், "சென்னை முதல் வேலூர் வரையிலான பெல்ட்டில் இன்று ரெட் தக்காளி மழைக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெல்டா முதல் சென்னை வரை வடக்கு கடலோர மாவட்டங்கள் எல்லாம் மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகளாக உள்ளன.
வெப்பத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 3 இடங்களில் மட்டுமே நேற்று வெப்பம் 38Cஐ தாண்டியது. இந்த மே மாதம் கோடை வெப்பம் கட்டுப்பாட்டில் இருப்பது ஒரு நல்ல விஷயம் தான்.. அவ்வப்போது தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று பரவலாக மழை பெய்ததால், மாநிலம் முழுவதும் வெப்பம் குறைவாகவே இருந்தது. கரூர் 38.2 டிகிரி செல்சியஸ், வேலூர் - 38.1 டிகிரி செல்சியஸ், திருப்பத்தூர் - 38.0 டிகிரி செல்சியஸ் மட்டுமே வெப்பம் பதிவானது.
வெப்பம் குறையும்
இன்று (வியாழக்கிழமை) வேலூர் மற்றும் கரூர் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும்.. இன்றும் கூட, தமிழ்நாட்டில் எந்த இடமும் 40 டிகிரி செல்சியஸை தாண்டாது. சென்னையைப் பொறுத்தவரை கடற்கரைக்கு அருகில் உள்ள பகுதிகளில் வெப்பம் 36 டிகிரி செல்சியஸாகவும், நகரின் உட்புறத்தில் 37 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும்.
வெளுக்கப் போகுது மழை
இன்று மூன்றாவது முறையாக சென்னை அதிர்ஷ்டசாலியாக இருந்து மழை பெய்யுமா எனக் கேட்டால்.. சென்னையிலிருந்து வேலூர் வரை இடியுடன் கூடிய மழைக்கு (ரெட் தக்காளிஸ்) இன்று மிகவும் நல்ல நாள். அதேநேரம் மழை மேகங்கள் சென்னை நகரத்திற்குள் நகருமா என்பதைப் பார்க்க வேண்டும். சென்னையைப் பொறுத்தவரை, இன்று மழை பெய்தால், அது இந்த மே மாதத்தின் மூன்றாவது மழையாக இருக்கும். எனவே இன்று மழை எப்படிப் பெய்தாலும் அதை நாம் வரவேற்கலாம்.. சென்னையின் மேற்கு உட்புறப் பகுதியில் மழைக்குச் சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது. டெல்டா முதல் கடலூர் - சென்னை வரை இன்று மழை இருக்கும்.. இன்று ஒரு உற்சாகமான நாள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications