அதிகரிக்கும் கடல் வெப்பம்.. அதிக வலிமை பெற்றதாக மாறும் புயல்கள்! மத்திய அரசு சொல்லும் ’பகீர்’ உண்மை!
சென்னை: கடல் வெப்ப அலைகளால் வரும் காலங்களில் புயல்கள் அதிக வலிமை பெற்றதாக மாறும் எனவும், வெப்பம் அதிகரிப்பால் மேகங்களின் நீரை சுமக்கும் திறன் அதிகரிக்கும் என மத்திய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிச்சந்திரன் கூறியுள்ளார்.
தற்போதைய சூழலில் காலநிலை மாற்றம் தான் உலகம் முழுவதும் பெரும் சவால் அளிக்க கூடியதாக மாறி இருக்கிறது. உலகின் வல்லரசு நாடுகளும், வளரும் நாடுகளும் இணைந்து கால நிலை மாற்றத்தை சமாளிக்க கோடிக்கணக்கான பணத்தை செலவு செய்து வருகின்றன.

மேலும் அணு ஆயுத குறைப்பு, பெட்ரோல் டீசல் குறைப்பு, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறுவது உள்ளிட்ட பல்வேறு வெப்ப குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. கால நிலை மாற்றத்தின் காரணமாக புவி வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக புவியின் வட தென் துருவங்களின் பனிப் பாறைகள் உருகி கடல் மட்டத்தின் அளவு உயர்ந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் வெப்ப அலை, திடீர் கனமழை, வெள்ளப்பெருக்கு, அடிக்கடி உருவாகும் புயல்கள் என இயற்கை பேரிடர்கள் அதிகரித்து வருகிறது. அது மட்டும் அல்லாமல் பாலை வனங்களில் கூட வெள்ளப் பெருக்கும் கனமழை கொட்டித் தீர்ப்பதும் அதிகரித்து இருக்கிறது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக உலகின் மிகப்பெரிய அமேசான் நதி வறண்டு வரண்டு போவதும், பாலைவனங்களில் பனிப் புயல் வீசுவதுமாக மாறி இருக்கிறது.
இதனால் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவைப் பொறுத்தவரை குறிப்பாக தமிழகத்தில் காலநிலை மாற்றம் பெரும் சவாலாகவே உள்ளது. ஜூன், ஜூலை மாதங்களிலேயே கோடை வெயில் போல கொளுத்துவதும், வெள்ளத்தையே சந்திக்காத மதுரையில் வெள்ளப்பெருக்கு. சென்னையில் முன்னரே கொட்டி தீர்த்த கனமழை என பல பிரச்சனைகள் இருக்கிறது.
இந்த நிலையில் இனி மேகங்களின் தண்ணீரை தாங்கும் திறன் அதிகரிக்கும், இதனால் கனமழையை முன் கூட்டியே கணிக்க முடியாது எனக் எனக் கூறியிருக்கிறார் மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளரான ரவிச்சந்திரன். சென்னை பள்ளிக்கரணையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்," காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள உலக நாடுகள் தயாராக வேண்டும். வரும் காலங்களில் உருவாகும் புயல்கள் மிகவும் வலிமையானதாக இருக்கும்.
கடல் வெப்ப அலைகள் காரணமாக புயல்கள் இனி மிகுந்த வலிமை பெற்றதாக மாறும். வெப்பம் அதிகரிப்பால் மேகங்கள் நீரை சுமக்கும் திறன் அதிகரித்துள்ளது. கால நிலை மாற்றம் காரணமாக மேகங்களை பரப்பளவு குறைந்து. அதிக நீரை கொண்ட மேகங்கள் உருவாகும். இதனால் குறிப்பிட்ட இடத்தில் அதிக கன மழை பெய்யும்.
கால நிலை மாற்றத்தால் கடல் வெப்பநிலை மாத கணக்கில் தொடர்கிறது. இதனால் அந்த கடற் பகுதியில் உருவாகும் புயல் கடல் வெப்பநிலை பகுதியை கடக்கும்போது மிக வலிமையானதாக மாறுகிறது. கடல் வெப்ப அலை காரணமாக அதிகபட்சமாக மழை பெய்யும். அதனை கணிக்கவும் முடியாது. அண்டார்டிகாவில் தற்போது நீருக்கடியில் ஒரு கிளாடரை அமைக்க இருக்கிறோம். அதன் மூலம் வெப்ப பாதிப்பு எந்த அளவுக்கு இருக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்" என கூறினார்.












Click it and Unblock the Notifications