நீலகிரியில் வெளுத்து வாங்கும் மழை.. கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
நீலகிரி: நீலகிரியில் கனமழை தொடர்வதால் கூடலூர் மற்றும் பந்தலூர் உள்ளிட்ட 2 தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு இன்றும் விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த சில நாட்களாக கோடை வெயில் உக்கிரத்தில் இருந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை கடந்து பதிவாகியிருந்தது. குறிப்பாக ஊட்டியில் 28 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெயில் பதிவாகியிருந்தது. இதற்கு முன்னர் இந்த அளவுக்கு வெயில் ஊட்டியில் பதிவானது கிடையாது. எனவே நீலகிரி மாவட்டத்தில் குடிநீருக்கு கடும் தடுப்பாடு ஏற்பட்டது. மேய்ச்சலுக்கு சென்ற கால்நடைகள் தண்ணீர் இல்லாமல் ஆங்காங்கே சுருண்டு விழுந்து உயிரிழந்தன.

இப்படி இருக்கையில் தற்போது நீலகிரிக்கு பருவமழை அதிக மழைப்பொழிவை கொடுத்திருக்கிறது. வழக்கமாக ஜூன் மாதம் 1ம் தேதியன்று தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால், இந்த முறை மே மாதம் 30ம் தேதியே மழை தொடங்கிவிட்டது. அந்த வகையில் கடந்த 29ம் தேதி நீலகிரியின் பந்தலூர் பகுதியில் 278 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்திருக்கிறது. எனவே ஊட்டி மற்றும் பந்தலூர் தாலுக்காவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் கடந்த சனிக்கிழமை விடுமுறை விடப்பட்டிருந்தது.
ஞாயிற்றுக்கிழமை காலை வரை பந்தலூா் (நீலகிரி) - 70, விண்ட் வொா்த் எஸ்டேட் (நீலகிரி) - 50. மேலும், கோவை, புதுக்கோட்டை, சேலம், திருச்சி, கன்னியாகுமரி, விழுப்புரம், தஞ்சாவூா் உள்ளிட்ட மாவட்டங்களில் பல இடங்களில் 10 மிமீ முதல் 40 மிமீ வரை மழை பதிவானது.
இன்றும் நீலகிரியில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று முதல் ஜூலை 6 வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இன்று நீலகிரி, கோவை மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
இதனையடுத்து நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் மற்றும் பந்தலூர் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்திருக்கிறார்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications