தொடர் கனமழை எதிரொலி.. ராமேஸ்வரத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
ராமநாதபுரம்: டிட்வா புயல் வடதமிழகம் நோக்கி நகர்ந்து வரும் சூழலில், தொடர் கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மாணவர்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் வீட்டில் இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
தெற்கு வங்கக் கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை பகுதிகளில் நிலவி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று டிட்வா புயலாக உருவாகி இருக்கிறது. இந்தப் புயல் வட தமிழகம் நோக்கி 10 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் நாகை, தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்யக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனல் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சி அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ராமநாதபுரத்தில் நேற்று முதலே தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் வட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், குழந்தைகள் பாதுகாப்புடன் வீட்டிலேயே இருக்குமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே ராமேஸ்வரத்தில் பலத்த சூறைக் காற்று வீசுவதால் பாம்பன் பாலம் வழியே செல்ல இருந்த அனைத்து ரயில்களும் மண்டபம் ரயில் நிறுத்தத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 50 கிமீ வேகத்தில் சூறைக் காற்று வீசுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த செயல்பாடுகள் அமைந்துள்ளன.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications