கடுமையான புயலாக கரையை கடந்த ரெமல்.. ரயில் சக்கரங்களை சங்கிலி போட்டு கட்டி வைத்த ஊழியர்கள்
கொல்கத்தா: 'ரெமல்' புயல் தீவிர புயலாக மாறி ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணி முதல் வங்கதேசம் மற்றும் மேற்கு வங்கம் இடையே கரையக் கடக்கத் தொடங்கியுள்ளது. கரையை கடந்து முடிய 4 மணி நேரமாகும் (cyclone remal landfall) என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புயலால் மேற்கு வங்க கடலோர மாவட்டங்கள் மற்றும் கொல்கத்தாவை சுற்றியுள்ள பகுதிகளில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களில் இருந்து சுமார் 394 விமானங்கள் முன்னெச்சரிக்கையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஹவுராவில் உள்ள ஷாலிமார் ரயில் நிலையத்தில் ரயில்வே ஊழியர்கள் ரயில்களை சங்கிலியால் கட்டி வைத்து பாதுகாத்து வரும் காட்சிகள் வெளியாகி திகில் கிளப்பியுள்ளன. ஹவுராவில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு ரயில்வே, ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி முதல் திங்கட்கிழமை காலை 6 மணி வரை சீல்டா தெற்கு மற்றும் பராசத்-ஹஸ்னாபாத் பிரிவுகளில் ரயில் சேவைகளை நிறுத்தியுள்ளது.
பல உள்ளூர் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் பணிகளுக்கு செல்வோர் பாதிக்கப்படக்கூடும். தென்கிழக்கு ரயில்வே ஞாயிற்றுக்கிழமை கந்தாரி எக்ஸ்பிரஸ் மற்றும் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் திகாவிற்குச் செல்லும் சில ரயில்களையும் ரத்து செய்துள்ளது.
மே 26-27 தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் வடக்கு ஒடிசாவின் கடலோர மாவட்டங்களில் மிகக் கனமழை பெய்யும் என IMD எச்சரிக்கை விடுத்துள்ளது. அஸ்ஸாம் மற்றும் மேகாலயாவிலும் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானாஸ், கிழக்கு மேதினிபூர், கொல்கத்தா, ஹவுரா மற்றும் ஹூக்ளி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

புயல் முன்னறிவிப்பு காரணமாக கொல்கத்தாவில் உள்ள ஷ்யாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் சரக்கு மற்றும் கொள்கலன் கையாளுதல் நடவடிக்கைகள் 12 மணி நேரம் நிறுத்தப்பட்டு உள்ளது. பேரிடர் மீட்பு படையினர் ஒலிபெருக்கி மூலம் பொது மக்களை எச்சரித்து வருகிறார்கள்.
இந்திய கடலோர காவல்படை (ஐசிஜி) ஹல்டியா, ஃப்ரேசர்கஞ்ச், பரதீப் மற்றும் கோபால்பூர் ஆகிய இடங்களில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக பேரிடர் நிவாரண குழுக்களுடன் கப்பல்கள் மற்றும் விமானங்களை தயார் நிலையில் வைத்துள்ளது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி












Click it and Unblock the Notifications