மிக்ஜாம் புயலால் 'கரண்ட் கட்' ஆகாது! டக்கராக மாறிய சென்னை.. தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மிக்ஜாம்' புயல் தெற்கு ஆந்திராவில் கரையை கடக்க இருக்கும் நிலையில், சென்னையில் மழை தீவிரமடைந்துள்ளது. மழை பாதிப்புகளை எதிர்கொள்ள என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்பது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வந்தது. இந்நிலையில் கடந்த மாதம் வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது கொஞ்சம் கொஞ்சமாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தற்போது புயலாக வலுப்பெற்றிருக்கிறது. இதற்கு 'மிக்ஜாம்' என பெயரிட்டுள்ளனர். இப்புயல் வரும் 5ம் தேதி சென்னைக்கும்-தெற்கு ஆந்திராவுக்கும் இடையே கரையை கடக்கும் என்று சொல்லப்பட்ட நிலையில், அதன் பாதை மாறியது.

Shiv Das Meena explains the measures taken in Chennai to face Cyclone Michaung

அதாவது தெற்கு ஆந்திராவின் நெல்லூருக்கும்-மசூலிப்பட்டினத்திற்கும் இடையே புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இருப்பினும் சென்னையில் சூறைக்காற்றும், கடும் மழையும் இருக்கும் எனவும் எச்சரித்திருந்து. எனவே சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. இது குறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா விளக்கமளித்திருக்கிறார்.

அவர் பேசியதாவது, "புயலை எதிர்கொள்ள தமிழக அரசு 100 சதவிகிதம் தயாராக இருக்கிறது. மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு காணொலி மூலமாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேபோல போலீஸ் மற்றும் தீயணைப்பு துறையினரும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள தயாராக இருக்கின்றனர். புயல் நெருங்கும்போது மழை தீவிரமாக இருக்கும். எனவே கடலோரமாக வசிக்கும் மக்களை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

இதற்கான முகாம்கள் தயார் நிலையில் இருக்கின்றன. முகாம்களில் அவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ வசதி உட்பட அனைத்தும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் இருக்கிறார்கள். சென்னையில் மட்டும் 43 தீயணைப்பு நிலையங்கள் இருக்கின்றன. இவை அனைத்திலும் தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

Shiv Das Meena explains the measures taken in Chennai to face Cyclone Michaung

பொதுவாக புயல் காலங்களில் மின்வெட்டு என்பது இருக்கும். ஆனால் இந்த முறை மின்வெட்டு ஏற்படாமல் இருக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. குறிப்பாக சாலை ஓரங்களில் இருக்கும் ஜங்சன் பாக்ஸின் உயரம் அதிகரிக்கப்பட்டிருக்கிறது. எனவே மழைநீர் இதற்குள் புகாது. மேலும் பலமாக சேதமடைந்துள்ள மின் கம்பங்கள் அகற்றப்பட்டு புதிய கம்பங்கள் நட்டு வைக்கப்பட்டிருக்கின்றன. பலத்த காற்று இருக்கும்போது பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று கூறியுள்ளார்.

கனமழையை பொறுத்த அளவில் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மிக கன மழை பெய்யும் என்றும், மணிக்கு 70 கி.மீ வரை சூறைக்காற்று வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+