என் பிள்ளை சார், என் சாமி! புல்டோசரில் சிக்கி மேலே வந்த உடல்! திருவண்ணாமலை நிலச்சரிவு.. ஷாக் ரீல்ஸ்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பரம் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. பெரிய பாறாங்கல் ஒன்று சறுக்கி வீடுகள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலச்சரிவு தொடர்பான ரீல்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலச்சரிவில் 7 பேர் பலியாகினர். அவர்களின் உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளன. உடல் மொத்தமாக மீட்கப்படவில்லை. உடல் பாகங்கள் அடுத்தடுத்து கிடைக்க தொடங்கி உள்ளன.

இதை பற்றிய ரீலிஸ் வெளியாகி உள்ளது. அதில் புல்டோசர் ஒன்றின் மூலம் பெண் ஒருவரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. உடல் கிழிந்து மிக மோசமான நிலையில் உள்ளது. இதை பார்த்த அந்த பெண்ணின் தந்தை என்ன பிள்ளை சார், என் சாமி என்று கதறும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன. இணையத்தில் இந்த ரீலிஸ் டிரெண்டாகி வருகிறது. யாருக்கும் இந்த நிலை வரக்கூடாது என்று மக்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த நிலச்சரிவு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், பெஞ்சல் புயல் மற்றும் அதி கனமழை காரணமாக திருவண்ணாமலை வ.உ.சி.நகரில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது நேற்று மாலை 4 மணியளவில் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பாறை மற்றும் கற்கள் உருண்டோடி வந்து விழுந்தன.
மண்மூடிய அவரது வீட்டில், ராஜ்குமார், அவரது மனைவி மற்றும் 5 சிறுவர் - சிறுமியர் சிக்கிக் கொண்டனர். அவர்களை எப்படியாவது உயிருடன் மீட்டிட வேண்டும் என்ற முனைப்போடு, தேசிய பேரிடர் மீட்புக்குழு - தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புக்குழு - தீயணைப்புத்துறை - காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

மலை இடுக்கில் நெரிசலாக இருந்த குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இந்த சிரமமான மீட்புப் பணி 24 மணி நேரத்தைக் கடந்த நிலையில், இன்று மாலை 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. இந்த செய்திகேட்டு மிகுந்த வேதனையுற்றோம். மீதமுள்ளோரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில், விபத்து நடந்த இடத்துக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை இன்று நேரில் பார்வையிட்டு, விபத்து குறித்து அதிகாரிகள் மற்றும் அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தோம்.
நம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நம் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இழப்பீட்டினை நாளை மாலைக்குள் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளோம்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு இடையே திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கே மீட்பு பணிகளை கவனிக்க பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளார்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications