திருவண்ணாமலை நிலச்சரிவில்.. கண்ட கோர காட்சி.. மீட்பு பணியாளர்களை.. பட்டென கலங்க வைத்த சம்பவம்
திருவண்ணாமலை: திருவண்ணாமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த 6வது நபரின் உடல் மீட்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், 6வது உடல் மீட்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் அங்கே நடந்த சம்பவம் ஒன்றை பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
மண்சரிவில் சிக்கிய மேலும் ஒருவரின் உடலை மீட்பு படையினர் தேடி வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பரம் நகரில் நிலச்சரிவு ஏற்பட்டு பல வீடுகள் இடிபாடுகளுக்குள் புதைந்துள்ளன. பெரிய பாறாங்கல் ஒன்று சறுக்கி வீடுகள் மீது விழுந்து விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நிலச்சரிவில் 7 பேர் பலியாகினர். அவர்களின் உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளன. உடல் மொத்தமாக மீட்கப்படவில்லை. உடல் பாகங்கள் அடுத்தடுத்து கிடைக்க தொடங்கி உள்ளன.
இந்த நிலையில் அங்கே நடந்த சம்பவம் ஒன்றை பற்றிய புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. திருவண்ணாமலையில் மண்சரிவால் உயிரிழந்த தனது உரிமையாளரைத் தேடி, 2 நாட்களாக அதே இடத்திலேயே சுற்றித் திரியும் வளர்ப்பு நாய் ஒன்றின் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. வளர்ப்பு நாய் இங்கும் அங்கும்.. தனது உரிமையாளரை தேடி.. குழி குழியாக தேடும் காட்சிகள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.
துணை முதல்வர் என்ன சொன்னார்?: இந்த நிலச்சரிவு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள போஸ்டில், பெஞ்சல் புயல் மற்றும் அதி கனமழை காரணமாக திருவண்ணாமலை வ.உ.சி.நகரில் வசித்து வந்த ராஜ்குமார் என்பவரது வீட்டின் மீது நேற்று மாலை 4 மணியளவில் மலையில் ஏற்பட்ட நிலச்சரிவின் காரணமாக பாறை மற்றும் கற்கள் உருண்டோடி வந்து விழுந்தன.
மண்மூடிய அவரது வீட்டில், ராஜ்குமார், அவரது மனைவி மற்றும் 5 சிறுவர் - சிறுமியர் சிக்கிக் கொண்டனர். அவர்களை எப்படியாவது உயிருடன் மீட்டிட வேண்டும் என்ற முனைப்போடு, தேசிய பேரிடர் மீட்புக்குழு - தமிழ்நாடு மாநில பேரிடர் மீட்புக்குழு - தீயணைப்புத்துறை - காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
மலை இடுக்கில் நெரிசலாக இருந்த குடியிருப்புப் பகுதியில் நடைபெற்ற இந்த சிரமமான மீட்புப் பணி 24 மணி நேரத்தைக் கடந்த நிலையில், இன்று மாலை 5 பேரின் உடல்களை மட்டுமே மீட்க முடிந்தது. இந்த செய்திகேட்டு மிகுந்த வேதனையுற்றோம். மீதமுள்ளோரின் உடல்களை மீட்கும் பணியில் மீட்புக்குழு ஈடுபட்டு வருகிறது.
இந்தச் சூழலில், விபத்து நடந்த இடத்துக்குச் சென்று அங்குள்ள நிலவரத்தை இன்று நேரில் பார்வையிட்டு, விபத்து குறித்து அதிகாரிகள் மற்றும் அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டறிந்தோம்.
நம் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திய இச்சம்பவத்தில் இறந்தோர் குடும்பத்தாருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க நம் முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். இழப்பீட்டினை நாளை மாலைக்குள் வழங்கிட வேண்டும் என மாவட்ட ஆட்சியரை அறிவுறுத்தியுள்ளோம்.
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தோருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதோடு, உற்றார் உறவினர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம், என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு இடையே திருவண்ணாமலை மண் சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹5 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அங்கே மீட்பு பணிகளை கவனிக்க பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளார்.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
திருவண்ணாமலையில் பௌர்ணமி கிரிவலம் வந்த பெண்கள்.. நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த கும்பல்.. அதிரடி கைது -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications