இந்த ஏரியாதான் அலர்ட்டாக இருக்க வேண்டும்.. ரொம்ப கவனம்.. தமிழ்நாடு வெதர்மேன் முக்கிய எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தென் தமிழ்நாடு இன்றும் நாளையும் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் அடிக்கடி விட்டு விட்டு மாலை வரை மழை பெய்யும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலோர தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இராமநாதபுரம், புதுக்கோட்டை தம்மார், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு வட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

Weather

தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விடுத்துள்ள எச்சரிக்கையில், தென் தமிழ்நாடு இன்றும் நாளையும் கவனமாக இருக்க வேண்டும். சென்னையில் அடிக்கடி விட்டு விட்டு மாலை வரை மழை பெய்யும். அது கனமழையாக இருக்கும். அதன்பின் மழை குறையும். உள்மாவட்டங்களில் மழை பெய்யும். காற்றழுத்த தாழ்வு மையம் அரேபியன் கடல் உள்ள திசையை நோக்கி நாளை நகரும்.

குற்றாலம், கொடைக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும். மதுரை, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் புதுக்கோட்டை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. டெல்டாவில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

பெரும்பாலான உள் மாவட்டங்கள், கோவையைச் சுற்றியுள்ள கொங்கு மண்டலம், சேலம், ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் இது ஒரு நல்ல நாள், என்று கூறியுள்ளார்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளின் வானிலை முன்னறிவிப்பு;

இதனால் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில்
பொதுவாக மிதமான மழை பெய்யக்கூடும், அவ்வப்போது வடகடலோர இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 26-27 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும் இருக்கக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதன் காரணமாகவே 4 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை பேரிடர்களை எதிர்கொள்ள அனைத்து துறைகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

சாட்டிலைட் புகைப்படங்கள்: இது தொடர்பான சாட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. சென்னைக்கு மேலே அதிக அளவில் மழை மேகங்கள் கூடி நிற்கின்றன. தாழ்வு மையம் நகர்வதால்... மழை மேகங்கள் ஒரு பக்கமாக சென்னைக்கு மேலே திரண்டு உள்ளன.

வங்கக்கடலில் நிலைகொண்டு உள்ள தாழ்வு மையம் தமிழ்நாடு நோக்கி நகர்வதன் காரணமாக சென்னையில் கனமழைக்கான சாதகமான சூழல்கள் ஏற்பட்டு உள்ளன. புகைப்படத்தில் இவை தெளிவாக இருக்கின்றன.

இதில் சிக்கலே தற்போது இது மெதுவாக நகருகிறது. இது மெதுவாக நகர்வது.. அல்லது நகராமல் இருப்பது தான் பெரிய சிக்கலாக மாறும். ஏனென்றால் ஒரு புயல் சின்னம் மெதுவாக நகர்ந்தால் அது மிகப்பெரிய அளவில் பலம் அடையும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+