Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பெரிதும் எதிர்பார்த்த தென் மேற்கு பருவ மழை பொய்த்தது.. காவிரி தண்ணீருக்கு இந்த ஆண்டும் பஞ்சம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த ஆண்டு வழக்கத்திற்கு மாறாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டது. இருப்பினும் கேரளா, கர்நாடகாவில் போதிய அளவுக்கு பருவ மழை பெய்யவில்லை. இன்னொரு பக்கம், வட இந்தியாவில் பல மாநிலங்களில் வெயில் 45-47 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகிக் கொண்டுள்ளது. இன்று முதல் கர்நாடகாவின் மலைப்பகுதிகளில் கன மழை ஆரம்பித்திருந்தாலும், ஒரு வாரம் வரை மட்டுமே தாங்குமே தவிர பிறகு மழை குறையும் என்று வெளியாகிவரும் கணிப்பு தூக்கிவாரிப்போட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 1ம் தேதி தொடங்கி, ஜூன் 20ம் தேதி வரை நாடு முழுவதும் பரவலாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. குறிப்பாக வட மாநிலங்களில் இதன் பாதிப்பு உச்சத்தில் இருந்தது. வெப்ப அலை, வெயிலின் தாக்கம் காரணமாக இந்த குறிப்பிட்ட நாட்களில் மட்டும் நாடு முழுவதும் 143 பேர் பலியாகியுள்ளனர். 41,789 பேர் ஹீட் ஸ்ட்ரோக் எனப்படும் வெப்ப பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

weather rain southwest monsoon

வட மாநிலங்கள்: இதில் பெரும்பாலான பாதிப்புகள் வட மாநிலங்களில்தான் ஏற்பட்டிருக்கிறது. மொத்தமாக உயிரிழந்த 143 பேரில் 35 பேர் உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர்கள். மேலும் 21 பேர் டெல்லி, 17 பேர் ராஜஸ்தானை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கைகள் குறைந்தபட்சம்தான் என்றும், அதிகபட்சமான எண்ணிக்கை இதை விட இரண்டு மடங்காக இருக்கும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

பருவமழை: வழக்கமாக கோடை காலங்களில் வெயிலின் தாக்கம் தீவிரமாக இருக்கும். ஆனால், ஜூன் மாதத்தில் பருவமழை இந்த வெப்பத்தை தனித்திருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும். இந்த மழையானது நாட்டின், ஒரு ஆண்டில் பெய்ய வேண்டிய ஒட்டுமொத்த மழை பொழிவில் 70 சதவிகிதத்தை பூர்த்தி செய்துவிடும். இந்த ஆண்டு மே 30ம் தேதியே தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது.

எதிர்பார்ப்பு: இப்படி தொடங்கிய பருவமழையானது டெல்லி, வடக்கு உத்தரப் பிரதேசம் என வட இந்தியா வரை பரவும். ஜூலை 15க்குள் நாடு முழுவதும் பெரும்பான்மையான மாநிலங்களில் இந்த பருவமழை மழைப்பொழிவை கொடுத்துவிடும். இந்த ஆண்டு சற்று சீக்கிரமாக பருவமழை தொடங்கியுள்ளதாலும், கோடை வெயில் கடுமையாக இருந்ததாலும், இயல்பை விட கூடுதலான மழை பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.

ஏமாற்றம்: கணிப்பின்படிதான் ஜூன் மாத தொடக்கத்தில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மழைபொழிவு இருந்தது. இதனையடுத்து ஜூன் 10ம் தேதி நிலவரப்படி பருவமழை மகாராஷ்டிராவின் பெரும்பாலான பகுதியை தொட்டுவிட்டது என வானிலை மையம் கூறியிருந்தது. ஆனால், தொடக்கத்தில் இருந்ததை போல பருவமழை அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடையவில்லை.

20% குறைவு: ஜூன் 10 நிலவரப்படி, பருவமழை வழக்கமான நிலப்பரப்பை கடந்திருந்தாலும், அதற்கடுத்த நாட்களில் மழையில் அளவு குறைந்திருக்கிறது என்பதை ஆய்வு மையம் அடிக்கோடிட்டு காட்டியுள்ளது. ஜூன் 11ம் தேதியிலிருந்து இன்றைய தேதி வரையான காலகட்டத்தை வைத்து பார்த்தால் மழையின் அளவு 20% வரை குறைந்திருக்கிறது. இந்த நாட்கள் வரை வழக்கமாக 80.6 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்க வேண்டும். ஆனால், வெறும் 64.5 மி.மீ மட்டுமே பெய்திருக்கிறது.

எந்தெந்த மாநிலங்களுக்கு பாதிப்பு?: பருவமழை குறைந்தது குறித்து புவி அறிவியல் அமைச்சகத்தின் முன்னாள் செயலர் எம்.ராஜீவன் கூறுகையில், “ஆரம்பத்தில் ஒரு வேகத்துடன் பருவமழை புறப்பட்டது. ஆனால் தற்போது புஸ்வானமாகியுள்ளது” என்று கூறுகிறார். தற்போதைய நிலவரப்படி ஒடிசா (-47%), மேற்கு வங்கம் (- 11%), பீகார் (- 72%) மற்றும் ஜார்கண்ட் (- 68%) ஆகிய மாநிலங்கள் அதிக அளவுக்கான, பருவமழையை இழந்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.

கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின், கணிப்புப்படி, ஜூன் மாதத்தில், கடலோர மாவட்டங்களின் ஒரு சில பகுதிகளில் மட்டுமே மழை பெய்துள்ளது, வழக்கமான பருவமழையின் வீரியமும் கடலோர மற்றும் மல்நாடு பகுதிகளில் இல்லை. இங்கெல்லாம் வீரியமாக மழை பெய்தால்தான் காவிரியில் தண்ணீர் செழிப்பாக வரும்.

அதேநேரம், ஜூன் 21 முதல் 28 வரை கடலோர மாவட்டங்களில் மீண்டும் கனமழை பெய்யக்கூடும் என்றும், ஜூலை மாதத்திற்கு பிறகு தீவிரம் குறையும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. "இந்த ஆண்டு பருவமழை பாதை கணிக்க முடியாததாக உள்ளது" என்கிறார் வானிலை ஆய்வாளர் சாய்சேகர். ஜூன் 1 முதல் 19 2024 வரையிலான தரவுகள்படி, தட்சிண கன்னடா மாவட்டத்தில் 33%, உடுப்பி மாவட்டத்தில் 30%, மற்றும் உத்தர கன்னடா மாவட்டத்தில் 23% மழை குறைந்துள்ளது.

ஆய்வாளர்கள் சொல்வது என்ன?: “தென்மேற்கு பருவமழை இரண்டு பிரிவுகளாக இந்தியாவுக்கு மழையை கொடுக்கும். ஒருபிரிவு கேரளாவிலிருந்து புறப்பட்டு மத்திய இந்தியா வரை விரிவடையும். மேற்கு வங்கம் வழியாக வடகிழக்கு மாநிலங்களுக்கு மழையை கொடுக்கும். தற்போது வடகிழக்கு மாநிலங்கள் நல்ல மழைபொழிவை பெற்று வருகின்றன. அருணாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், மேகாலயா, சிக்கிம், நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம், திரிபுரா மற்றும் மேற்கு வங்கத்தின் துணை இமயமலைப் பகுதிகளில் பருவமழை தீவிரமாக உள்ளது.

மிச்சமிருக்கும் மாநிலங்கள்: ஜூன் இறுதியில் பருவமழை புத்துயிர் பெறும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருப்பினும், வட இந்தியாவில் பருவமழை எப்போது தொடங்கும் என்பது நிச்சயமற்றதாகவே உள்ளது. இந்த வார இறுதியில், மகாராஷ்டிராவின் மீதமுள்ள பகுதிகள், மேற்கு வங்கம், ஒடிசாவின் சில பகுதிகள், சத்தீஸ்கர் மற்றும் பீகாரின் சில பகுதிகள் மற்றும் கடலோர ஆந்திரப் பிரதேசத்தில் பருவமழை சற்று தீவிரமடைய வாய்ப்பிருக்கிறது. உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி மற்றும் சண்டிகரில் ஜூன் இறுதியுடன் வெயில் குறையும்” என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

வழக்கமாக கோடை காலங்களில் வெயில் அதிகமாக இருந்தால் காற்று ஈர்க்கப்படுவதன் காரணமாக நல்ல மழைப்பொழிவை ஏற்படுத்தும். எனவே வட மாநில மக்கள் மழை பொழிவை நம்பியிருந்தனர். ஆனால், ஆய்வாளர்களின் கணிப்புகளையும் இந்த பருவமழை பொய்யாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+