சென்னையில் அதிகாலையில் வெளியே வந்து பார்த்தவர்களுக்கு ஷாக்.. வானத்தில் என்னங்க இது? ஒரே குழப்பம்
சென்னை: சென்னையில் திடீரென வானிலை இன்று மாற்றம் அடைந்துள்ளது. கடந்த வாரம் மாலை நேரங்களில் கனமழை பெய்த நிலையில் தற்போது காலையில் மழை பெய்து உள்ளது. சாலையே தெரியாத அளவிற்கு வானம் இருட்டாக உள்ளது
சென்னையின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. காலையில் சாலையில் ஏற்பட்ட பனிமூட்டம் காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் செங்கல்பட்டு, புதுக்கோட்டை, திண்டுக்கல், நீலகிரி, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரம் ஆங்காங்கே மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் ஒரு சில இடங்களில் வானம் மேகமூட்டதுடன் காணப்படும். சில இடங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
வானிலை அறிவிப்பு: தமிழ்நாட்டில் அடுத்த 1 வாரத்திற்கு பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. சென்னையில் இன்று மாலைக்கு பின் கனமழை பெய்யும். பகல் நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை; மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
08.07.2024 மற்றும் 09.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
10.02.2024 முதல் 12.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
18.07.2024: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்): தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி சின்னக்கல்லார் (கோயம்புத்தார் தலா 3 தேவாலா அவலாஞ்சி வைா வால்பாறை PTC (கோயம்புத்தூர் ?. வால்பாறை PAP 2 (கோயம்புந்தார்). மேல் பவானி (நீலகிரி), சின்கோனா (கோயம்புத்தூர்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தார். சோலையார் (கோயம்பத்தார் சிறுவாணி அடிவாரம் ஸ்ரீர் சுத்திகரிப்பு நிலையம்) (கோயம்புத்தூர்), உபாசி தேயிவை ஆராய்ச்சி அறக்கட்டளை (கோயம்புத்தூர்) தலா 1. .
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான வெப்பநிலை (சமவெளிப்பகுதிகள்): அதிகபட்ச வெப்பநிலை : மதுரை (விமான நிலையம்): 37.3 செல்சியஸ் குறைந்தபட்ச வெப்பநிலை: ஈரோடு 18.5 செல்சியஸ்
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
வெளுத்து வாங்கப் போகும் கனமழை! இரவோடு இரவாக 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications