சென்னையில் ஆச்சர்யம்.. அதிகாலையில் திடீரென பெய்த கனமழை.. மீண்டும் பெய்யுமா? வானிலை அறிவிப்பு
சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்துள்ளது.
கடந்த ஒன்றரை மாத வெயிலுக்கு இடையில் திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளது. தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.

இன்று அதிகாலை கிண்டி கோட்டம் கிண்டி, மயிலாப்பூர், வேளச்சேரி, தாம்பரம், ஆலந்தூர் மற்றும் சோழிங்கநல்லூர் தாலுகாக்களை உள்ளடக்கிய பகுதிகளில் மழை பெய்தது. அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் மழை தொடங்கியது.
5 - 6 மணி வரை மழை விடாமல் நீடித்தது. 6 மணி தாண்டியும் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக இந்த திடீர் மழை பெய்துள்ளது. பெங்களூரில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
ஹைதராபாத்தில் இரண்டு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து கொண்டு இருக்கிறது. அதிலும் நேற்று ஹைதராபாத்தில் பெய்த மழைக்கு இடையே சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது. நேற்று இரண்டு மணி நேரம் அங்கு விடாமல் கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக ஹைதராபாத்தில் சாலைகளில் வெள்ளம் ஏற்பட்டது.
சென்னை மழை: இப்படிப்பட்ட நிலையில்தான் சென்னையில் பல்வேறு இடங்களில் அதிகாலையில் நல்ல மழை பெய்துள்ளது. திடீரென மாறிய வானிலை காரணமாக கடும் சூட்டில் இருந்து தணிப்பு ஏற்பட்டது.
கடந்த ஒன்றரை மாத வெயிலுக்கு இடையில் திடீரென அதிகாலையில் மழை பெய்துள்ளது. கடுமையான சூடு மற்றும் கடுமையான ஈரப்பதம் காரணமாக மக்கள் முடங்கி இருந்த நிலையில் குளிர்ச்சியான இந்த மழை சென்னை வானிலையை மாற்றி உள்ளது. தெற்கு சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்தது.
அசோக் நகர், அண்ணா நகர், வடபழனி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், வளசரவாக்கம், தி நகர், மயிலாப்பூர், கேகே நகர் உள்ளிட்ட இடங்களில் அதிகாலையில் கனமழை பெய்தது. தென் சென்னையில் சில பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது.
அடையாறு, வேளச்சேரி, ஆழ்நதூர், புறநகரில் தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இன்று சில மணி நிறங்கள் இதேபோல் மழை நீடிக்கலாம். ஆனால் சாரல் மழை மட்டுமே பெய்யும், கனமழை பெய்ய வாய்ப்பு இல்லை.
அதன்பின் இந்த மழை நின்றுவிடும். சென்னையில் இன்று பிற்பகல் மீண்டும் வெயில் அடிக்கவே வாய்ப்புகள் உள்ளன.
சென்னையில் இன்று பிற்பகல் சுமார் 36 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலை நிலவ வாய்ப்புகள் உள்ளன. சில இடங்களில் 38 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை செல்லும் வாய்ப்புகள் உள்ளன. கடலோர பகுதிகளில் ஈரப்பதம் நேற்றைவிட குறைவாக இருக்கும்.
அங்கே வெப்பநிலை 37 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும். பிற்பகல் நேரத்தில் சில இடங்களில் 38 டிகிரி செல்ஸியஸ் இருக்கும். ஆனால் உணரும் வெப்பநிலை .. அதாவது சூட்டின் தன்மை 47 டிகிரி செல்ஸியஸ் போல இருக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications