நெருங்கி வரும் மிக்ஜாம் புயல்.. தப்பித்தவறி கூட இதை பண்ணாதீங்க.. அரசு வெளியிட்ட வார்னிங்.. முக்கியம்
சென்னை: தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் இன்று மிக்ஜாம் புயல் உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக சென்னை மாநகராட்சி முக்கியமான சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இந்த புயல் காரணமாக திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

மிக்ஜாம்' புயல் எச்சரிக்கை காரணமாக நாளை டிசம்பர் 04 திங்கட்கிழமையன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகியவை ஆகும்.
புயல் மழை; இந்த புயல் காரணமாக இன்று தமிழ்நாடு முழுக்க இன்று கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. சென்னை , திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
மிக்ஜாம் இன்று புயலாக உருவெடுக்கும். அதன்பின் இது தீவிர புயலாக மாறி.. பின்னர் டிசம்பர் 2-3ம் தேதிகளில் அதி தீவிர புயலாக மாறும். பெரும்பாலும் இந்த சமயத்தில் புயல் நகர்ந்து நகர்ந்து டிசம்பர் 4ம் தேதி சென்னைக்கு கிழக்கு பகுதிக்கு வரும்.
இந்த புயல் சென்னைக்கு எவ்வளவு அருகே வருகிறது என்பதை பொறுத்தே இந்த புயல் காரணமாக சென்னையில் எவ்வளவு மழை பெய்யும் என்பது தெரியும். இந்த புயத்தால் பெரும்பாலும் சென்னை அல்லது தெற்கு ஆந்திர பிரதேசத்தில் காவாலி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன. டிசம்பர் 5ம் தேதி மாலை அல்லது இரவில் இது கரையை கடக்கும் வாய்ப்புகள் உள்ளன, என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
முதல்வர் எச்சரிக்கை: இந்த புயல் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் விடுத்துள்ள எச்சரிக்கையில், அடுத்த 2 நாட்களுக்கு மழை, கனமழை பெய்யும் என எச்சரிக்கை வெளியிடப்பட்டிருக்கும் நிலையில் அமைச்சர்கள், சட்டமன்ற-நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாவட்டக் கழகச் செயலாளர்கள் உள்ளிட்ட கழக அமைப்புகளில் உள்ள அனைத்து நிர்வாகிகளும் அவர்களது பகுதியில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்கு உதவிட வேண்டும். நிவாரணப் பணிகளில் ஈடுபடும் அரசு அதிகாரிகளுக்குத் துணைநிற்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். உதவிக்கு: TN SDMA மாநில உதவி எண்: 9445869848, அழைக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சி எச்சரிக்கை: . இந்த புயல் காரணமாக சென்னை மாநகராட்சி முக்கியமான சில எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. புயல் கரையை கடந்த பின் செய்ய வேண்டியவை, செய்ய கூடாதவை என்னென்னெ என்று சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அதில், வீட்டுக்குள் மின்சாரம் எரிவாயுவை அணைக்கவும்
கதவுகள் ஜன்னல்களை மூடி வைக்கவும்
பழுதடைந்த வீடாக இருந்தால், பாதுகாப்பான இடத்திற்கு செல்லுங்கள்.
கொதிக்க வைத்த/குளோரின் கலந்த குடிநீரைப் பருகுங்கள்
அதிகாரப்பூர்வமான செய்திகளை மட்டும் நம்புங்கள்
சேதமடைந்த கட்டிடத்தின் அருகில் செல்லாதீர்கள்
உடைந்த மின் கம்பங்கள்/அறுந்து விழுந்த மின் கம்பிகள் அருகில் செல்லாதீர்கள்
மின்சார சாதனங்களை முழுதாக சார்ஜ் செய்து வைத்துக்கொள்ளவும்.
மரங்கள், மின் கம்பங்களுக்கு கீழே நிற்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
-
சென்னை மெட்ரோ தலைகீழாக மாறப்போகிறது.. ஷாப்பிங் + கொண்டாட்டம்.. ஒரே இடத்தில்! -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications