4 மாவட்டங்களில் 100 டிகிரி அடித்த வெயில்.. இனி இப்படித்தான் இருக்கும்! வானிலை மையம் வார்னிங்
சென்னை: தமிழகத்தில் நேற்று 4 மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியிருக்கிறது. இனி வரும் நாட்கள் இப்படித்தான் இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருக்கிறது.
அதாவது அதிகபட்சமாக திருப்பத்தூரில் 102.38 டிகிரி பாரன்ஹீட், கன்னியாகுமரியில் 101.84 டிகிரி, சேலத்தில் 100.58, பரமத்தி வேலூரில் 100.4 என வெயில் பதிவாகியுள்ளது. இன்றைய நிலவரம் குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில்,

"இன்றும் நாளையும் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். 8 மற்றும் 9ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்.
10ம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 11 மற்றும் 12ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வெப்பநிலை உயர்வை பொறுத்தவரை, இன்று தொடங்கிய 9ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2° செல்சியஸ் வரை உயரக்கூடும். ஓரிரு இடங்களில் -3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை முன்னறிவிப்பு:
இன்று (06-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். நாளை (07-03-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை விடுக்கப்படவில்ல. கடந்த 24 மணி நேரத்தில் கரூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் 3.1-5 டிகிரி செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது. அதேபோல, சென்னை, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கன்னியாகுமரி, மதுரை, நாகப்பட்டினம், சேலம், திருச்சி, திருவள்ளூர், ராமநாதபுரம் மற்றும் வேலூர் மாவட்டங்களில் 1.6°செல்சியஸ் முதல் 3.0° செல்சியஸ் வரை வெயில் அதிகரித்துள்ளது.












Click it and Unblock the Notifications