பொத்துக்கிட்டு ஊத்த போகுது வானம்.. நீலகிரிக்கு ரெட் அலர்ட்! 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்! கவனம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்திருக்கும் நிலையில் நீலகிரி மாவட்டத்திற்கு இன்று அதி கன மழைக்கான ரெட் அலர்ட் கொடுத்துள்ளது சென்னை வானிலை ஆய்வு மையம். அது மட்டுமல்லாமல் கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட மாவட்டம் 9 மாவட்டங்களில் கன மழை பெய்யலாம் எனவும், மிக கனமழை பெய்யலாம் எனவும் சென்னை உள்ளிட்ட 24 மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில்," மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது, இன்று (அக்டோபர் 24, 2026) காலை 08:30 மணி அளவில் அதே பகுதியில் 'ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது.

weather Rain Tamil Nadu

இது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக (Depression) அதே பகுதிகளில் நிலவக்கூடும். மேலும் இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெற்று, நாளை (25.10.2026) ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் (Deep Depression), மேலும் வலுப்பெற்று 26.10.2026 தேதியில் மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் புயலாகவும் (Cyclonic Storm) மாறக்கூடும்.

அக்டோபர் 28ஆம் தேதி காலை ஆந்திரப் பிரதேச கடற்கரைக்கு அருகே மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் நிலைகொள்ள வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் மற்றொரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. இதனுடன் தொடர்புடைய வளிமண்டலச் சுழற்சியும் நீடிப்பதால், தமிழகத்தின் மழை நிலவரத்தை வானிலை ஆய்வு மையம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது.

விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் கோவை மாவட்டங்களில் மற்றும் புதுச்சேரி & காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்
இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை தேனி, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய அதி கன மழை பெய்யக்கூடும்.

கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் சிவகங்கை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, விருதுநகர் மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மற்றும் புதுவையிலும் ஓரிரு இடங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.

தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில்
இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+