பொளக்கும் வெயில்! வானிலையில் திடீர் மாற்றம்.. இனி வரும் நாட்கள் எப்படி இருக்கும்? தெரிஞ்சுக்கோங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்திருந்தது. இந்நிலையில் இன்று வெயில் தீவிரமாக இருக்கிறது. அடுத்து வரும் நாட்களில் வானிலை எப்படி இருக்கும்? என்பது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, "மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

Tamil Nadu rain

நாளை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.22 மற்றும் 23ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.24ம் தேதி தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆக.25 மற்றும் 26ம் தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

இன்று (20-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28* செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (21-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34-35* செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஜூன் 1ம் தேதி தொடங்கி இன்று வரை தமிழகத்தில் சராசரியாக 192.4 மில்லிமீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பான மழையை விட 10 சதவீதம் அதிகமாகும். மாவட்ட வாரியாக பார்த்தால் அதிகபட்சமாக திருநெல்வேலி மாவட்டத்தில் 225 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்கிறது. இது இயல்பான மழையை விட 355 சதவீதம் அதிகமாகும்.

அதே போல மயிலாடுதுறை மாவட்டத்தில் 69 சதவீதமும், காரைக்காலில் 44 சதவீதமும், கோயம்புத்தூரில் 55 சதவீதமும், பெரம்பலூரில் 43 சதவீதமும், தென்காசியில் 97 சதவீதமும் மழை கூடுதலாக பதிவாகி இருக்கிறது. சென்னையை பொறுத்தவரையில் மழை இயல்பை விட ஒன்பது சதவீதம் குறைவாகப் பெய்து இருக்கிறது. அதாவது இந்த காலத்தில் 261.8 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பதிவாகி இருக்க வேண்டும். ஆனால் 238.6 மில்லிமீட்டர் அளவுக்கு மட்டுமே மழை சென்னையில் பதிவாகி இருக்கிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 20 சதவீதமும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 17 சதவீதமும் மழை குறைவாக பெய்திருக்கிறது. திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் இயல்பை விட மழை 15 சதவீதம் கூடுதலாக பெய்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+