கடலோரப் பகுதிகளில் இன்று பகல் 1 மணிக்குள் மழை கொட்டும்.. வடசென்னைக்கு வானிலை மையம் அலர்ட்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் 10 மாவட்டங்களில் இன்று பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று 1 மணி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்றும் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather rain cyclone

கனமழை காரணமாக விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக்டோபர் 23) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டடத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பகல் 1 மணி வரை

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் வடசென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இன்று பகல் 1 மணி வரை இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 23ஆம் தேதியான இன்று கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.

ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூர், கடலூர், விழுப்புரம், திருப்பூர், பெரம்பலூர், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் அநேக இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Weather rain cyclone

அர்னாப் புயல்

வானிலை மையம் வெளியிட்ட தகவலின்படி, வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 23) காலை புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகி உள்ளது. குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அக்டோபர் 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், அக்டோபர் 25 ஆம் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறும்.

தொடர்ந்து, அக்டோபர் 26ஆம் தேதிக்குள் புயலாக மாற வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிசா கடற்கரையை நோக்கி நகரக்கூடும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். புயலாக உருவானால் வங்கதேசம் பரிந்துரைத்துள்ள அர்னாப் என்ற பெயர் சூட்டப்படும். அர்னாப் என்ற கடல் என்று அர்த்தம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+