விழுப்புரம் டூ கன்னியாகுமரி.. 13 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்திருக்கிறது. ஆனால் மழை முற்றிலுமாக குறையவில்லை. இந்நிலையில், இரவு 10 மணிக்குள் 13 மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

விழுப்புரம், கடலூர், நாமக்கல், பெரம்பலூர், சேலம், ஈரோடு, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. முன்னதாக விடுக்கப்பட்டிருந்த அறிவிப்பில்,

Tamil Nadu rain chennai

"கடந்த 24 மணி நேரத்தை பொறுத்த அளவில், தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது. நாலுமுக்கு (திருநெல்வேலி) 2, நெய்யூர் AWS (கன்னியாகுமரி), ஊத்து (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி), சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), (கோயம்புத்தூர்), வால்பாறை PTO உள்ளிட்ட பகுதிகளில் தலா 1 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியிருக்கிறது.

வெப்பநிலை நிலவரத்தை பொறுத்த அளவில், அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 37.7° செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாக (சமவெளிப்பகுதிகளில்) கரூர் பரமத்தியில் 22.0° செல்சியஸும் வெயில் பதிவாகியுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கையை பொறுத்தவரை, தற்போது மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்றும் நாளையும் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஜூன்.3ம் தேதி தொடங்கி, 7 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரை, இன்று (01-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-38" செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

நாளை (02-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37-3 செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+