தமிழகத்தில் அக்டோபர் மாதத்தில் இயல்பை விட அதிக மழை! வானிலை மையம்
சென்னை: தமிழகத்தில் கடந்த மாதம் (அக்டோபர்) இயல்பை விட 36 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அக்டோபர் மாதம் 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.
தமிழகம், தென் ஆந்திரத்தில் ஆண்டு மழை தேவையில், பெரும்பகுதியை வடகிழக்கு பருவமழை காலத்தில் கிடைக்கும். ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர், நவம்பர், டிசம்பர் ஆகிய மாதங்கள் வடகிழக்கு பருவமழை காலங்கள் ஆகும்.

இந்த 3 மாதங்களில் ஆண்டுக்கு 44 செ.மீ. மழை பெய்யும். அதிலும் அக்டோபர் மாதத்தில் மட்டும் 18 சதவீதம் அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும். நடப்பாண்டு அக்டோபர் 16ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது.
இந்த காலகட்டத்தில் ஒரு புயலும் உருவானது. அது ஆந்திராவில் கரையை கடந்ததால் கனமழையை கொடுத்துவிட்டுச் சென்றது. இதன்படி அக்டோபர் 1 ஆம் தேதி முதல் பெய்யும் மழை வடகிழக்கு பருவமழையில்தான் சேர்க்கப்படும்.
அந்த வகையில் கடந்த மாதத்தில் 18 செ.மீ. என்ற இயல்பான அளவை விட 23 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. இது 36 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் இயல்பை விட 25 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது என வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னையில் 27 செ.மீ. அக்டோபர் மாத இயல்பான மழை அளவு, ஆனால் 35 செ.மீ. பெய்தது. இது இயல்பைவிட 29 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு சென்னையில் அக்டோபர் மாதத்தில் 35 சதவீதம் கூடுதலாக மழை பெய்தது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்து, தெற்கு மியான்மர் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதியில், வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதனால், அடுத்த இரண்டு நாட்களில், மத்திய கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். எனினும், இதனால் தமிழகத்தில் நேரடி தாக்கம் இருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில், இன்றும், நாளையும் வறண்ட வானிலை காணப்படும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் முதல், சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications