பணம் கொடுத்தாச்சு.. மக்கள் போனுக்கு திடீரென போன எஸ்எம்எஸ்.. தமிழ்நாடு அரசின் செம வியூகம்.. அடடே
சென்னை: தமிழ்நாடு அரசு 6 மாவட்டங்களில் வழங்கி வரும் ரூ. 6000 வெள்ள நிவாரண தொகையை வழங்கி வருகிறது. இதில் நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் வழங்கப்படும் நிவாரண தொகைக்கான டோக்கன் வழங்கப்படுகிறது. தென் மாவட்டங்களில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது.
பெருமழை மற்றும் பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு வீட்டுவசதி, தொழிற்கடன் உள்ளிட்ட 1000 கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணத் தொகுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

கடந்த ,18, 17 , ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில்
தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக
பாதிக்கப்பட்டன.
மழை வெள்ளம்: வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 21.12.2023 அன்று ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, .கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், .பி.கீதா ஜீவன், அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், .ஆர்.எஸ். ராஜகண்ணப்பன், பி.மூர்த்தி, த.மனோ தங்கராஜ் ஆகியோர் உடனடியாக பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட
முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டிருந்தார்கள்.
அதேபோல் 10-க்கும் மேற்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட அனுப்பிவைக்கப்பட்டனர். முதலமைச்சர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், குறிப்பாக குடிநீர் மற்றும் மின்சார வசதி வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் தற்காலிக அடிப்படையில் சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மின் துறை, நகராட்சித் துறைப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிரமாகக் களப் பணியாற்றினார்கள்.

நிவாரணம்: இந்தச் சூழ்நிலையில், கடந்த 21.12.2023-ஆம் தேதி அன்று தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்குவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள்.
ஆலோசனை: இந்த நிலையில் சமீபத்தில் முதல்வர் ஸ்டாலின் இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் . அதிகாரிகளிடம் ஸ்டாலின் நிவாரண தொகை குறித்து பேசினார். அதில், டோக்கன் சரியாக வழங்கப்படுகிறதா? ரேஷன் கடைகளில் அதிக கூட்டம் வரிசை இருக்கிறதா? என்று ஆலோசனை செய்தார். முக்கியமாக சில இடங்களில் டோக்கன் பிளாக்கில் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது.
அதாவது சில இடங்களில் ரேஷன் ஊழியர்கள், கவுன்சிலர்கள் வழியாக டோக்கன்கள் கொடுக்கப்படுவதாக புகார்கள் முதல்வர் காதுக்கு சென்றுள்ளது. இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் கடுமையான கேள்விகளை எழுப்பி உள்ளார். இதுவரை பட்டுவாடா செய்யப்பட்ட பணம்.. பயன்பெற்ற நபர்களின் எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது.

மெசேஜ்: இந்த நிலையில்தான் ரூ. 6000 வழங்கியதில் மோசடி ஏதாவது நடந்துள்ளதா என்பதை கண்டுபிடிக்க மெசேஜ் அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது.. வெள்ள நிவாரண தொகை : ரூ.6 ஆயிரம் பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழ்நாடு அரசின் வெள்ள நிவாரண தொகை ரூ. 6,000 பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி ஒன்று அனுப்பி வைக்கப்படுகிறது. ஒருவேளை ஒருவருடைய ரேசன் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தால் அது தொடர்பாக புகார் அளிக்க ஒரு மொபைல் எண்ணும் வழங்கப்படுகிறது.
PDS Bill 150050124000103 Flood Relief Rs 6000-1.0No/Flood Relief 5KG Rice-1.0No issued on 02.01.2024 for Rs.0.0/-. To complain 9773904050 -என்ற எண்ணுடன் மெசேஜ் அனுப்பி வைக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications