Ditwah Schools leave: அதிகனமழை எச்சரிக்கை! தமிழகம் முழுவதும் இன்று அனைத்து பள்ளிகளுக்கு விடுமுறை
சென்னை: அதிக கனமழை எச்சரிக்கை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எந்த சிறப்பு வகுப்புகளையும் நடத்தக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: 'கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டியுள்ள மாவட்டங்களில் சனிக்கிழமை (நாளை) அதிகனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளுக்கும் சனிக்கிழமை (நாளை) விடுமுறை விடப்படுகிறது. பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக் கூடாது' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித் துறையின் கால அட்டவணைப்படி இன்றைய தினம் விடுமுறை நாள்தான். ஆனால் தனியார் சுயநிதி பள்ளிகளில் வகுப்பு இருக்கலாம் என்பதை கருத்தில் கொண்டு பள்ளிக் கல்வித் துறை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளது.
இலங்கை பகுதியில் இருந்து வடமேற்காக நகர்ந்து வரும் டிட்வா புயல் டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலை வடதமிழகம், புதுவை, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அருகே நிலவக் கூடும். இதன் காரணமாக டெல்டா மற்றும் அதையொட்டிய கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்டா மற்றும் அதை ஒட்டிய கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதிகபட்சமாக மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். இதர கடலோர மாவட்டங்களில் அதிகபட்சமாக 75 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இன்று (டிச.29) மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகனமழை ('ரெட் அலர்ட்') பெய்யக்கூடும். ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.
புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
-
பாஜகவுக்கு ஆதரவு தரும் திமுக? டெல்லியை அதிர வைக்க போகும் மாற்றம்.. ரெடியாகும் மாஸ்டர் பிளான் -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
வெளிப்படையாக வார்னிங் கொடுத்த விஜய்.. சிங்கப்பெண் நிகழ்ச்சியில் நடந்த முக்கிய விஷயம்! -
விஜய் - மோடி சந்திப்புக்கு பின்பு நடந்த முக்கிய மாற்றம்! தரமான செயல்..! #தமிழ்த்தாய்வாழ்த்து -
HDFC வங்கியால் கடன் வாங்கிய அனைவருக்கும் ஷாக்.. உங்க EMI அதிகரிக்க போகிறது? -
கடைசியில் ட்விஸ்ட்.. பாஜக சொன்ன பாயிண்டு! காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு -
வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு NRI ஜாக்பாட்! கையில் டாலர் இருந்தா போதும், RBI கொடுத்த மெகா சலுகை! -
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
41 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. வலைதள வீடியோவால் சிக்கிய 10 பேர் கும்பல்.. கர்நாடகாவில் கொடூரம் -
எலான் மஸ்க்-ன் 'SpaceX' ஐபிஓ.. இந்திய முதலீட்டாளர்களுக்கு காத்திருக்கும் அரிய வாய்ப்பு! -
"அந்த" 14 கையெழுத்தால் வந்த சிக்கல்.. மம்தா வீட்டில் சிஐடி அதிரடி சோதனை.. மேற்கு வங்கத்தில் பதற்றம் -
தமிழ்நாட்டில் 6 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு!












Click it and Unblock the Notifications