இடி, மின்னலுடன் மழை.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! அடுத்த சில நாட்கள் இப்படித்தான் இருக்குமாம்
சென்னை: தமிழகத்தில் மே மாதம் மழை பெய்துவிட்டு, அப்போது அடிக்க வேண்டிய வெயில் இப்போது அடித்துக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இன்று சில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என்றும், அடுத்த சில நாட்களுக்கு கனமழை பெய்யலாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையை எடுத்துக்கொள்ளுங்கள், கடந்த சில நாட்களாக மழை பெய்து, வெயில் அப்படியே குறைந்திருந்தது. மே மாதத்தில் வழக்கமாக 104 டிகிரி வரை வெயில் பதிவாகும். ஆனால் கடந்த 21 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த ஆண்டின் மே மாதத்தில்தான் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு சென்னையில் பதிவாகாமல் இருந்தது.

அப்போது கருணை காட்டிய இயற்கை, ஜூன் மாதம் தனது வேலையை காட்ட தொடங்கியுள்ளது. ஜூன் முதல் வாரத்தில் சென்னையில் 101 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு வெயில் பதிவாகியது. ஆனால் மாலை நேரங்களில் மழை பெய்தது. மழை நீண்ட நேரம் நீடிக்காததால், புழுக்கம் அதிகரித்து இரவில் அசௌகரியம் ஏற்பட்டது. இந்நிலையில்தான் இன்று தொடங்கி அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை இருக்கும் என வானிலை மையம் கூறியிருக்கிறது.
அடுத்த 7 நாட்களுக்கு எங்கெல்லாம் மழை?
அதாவது, "தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. எனவே இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன்.10ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன்.11ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்ய பெய்யக்கூடும். கடலூர், வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மற்றும் புதுவையிலும் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன்.12ம் தேதி தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
ஜூன்.13ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:
அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கை பொறுத்தவரை, இன்று தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு. நாளையும் நாளை மறுநாளும் தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 1-2° செல்சியஸ் வரை சற்று குறையக்கூடும்.
அதேபோல இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாட்டை பொறுத்த அளவில், இன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
குறிப்பாக இன்று அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒரிரு இடங்களில் இயல்பை விட 1 -3° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.
சென்னையில் வானிலை எப்படி இருக்கும்?
இன்று (08-06-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28" செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்" என வானிலை மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications