அடுத்த 3 மணி நேரம்.. 12 மாவட்டங்களில் வெளுக்கப் போகும் கனமழை.. மக்களே கவனம்!
சென்னை: தமிழ்நாட்டில் காலை 10 மணி வரை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெற்கு கடலோர ஆந்திராவில் இருந்து, தமிழக கடலோர பகுதி வழியாக, வடக்கு இலங்கை வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்கள் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அதேபோல் தமிழ்நாட்டில் இந்த மழை ஆகஸ்ட் 14 வரை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றிரவு முதலே தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்யத் தொடங்கியது. மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, கடலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டியது.
இதனால் இரவில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. தொடர்ந்து இன்று 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, தர்மபுரி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை 10 மணி வரை தமிழ்நாட்டின் 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதன்படி கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சென்னையைப் பொறுத்தவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் காலை நேரத்தில் வெளியில் செல்வோர் குடையுடன் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். இதனால் பள்ளி மாணவர்கள், மாணவிகள் வெளியில் சென்று மழையில் சிக்காமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
லேட்டாக தொடங்கிய தென்மேற்கு பருவமழை.. இந்த ஆண்டு கொஞ்சம் சிக்கல்தான்! IMD கொடுத்த வார்னிங்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications