மக்களே குடையை ரெடியா வெச்சுக்கோங்க.. வெளுக்கப்போகும் மழை.. 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் கோவை, நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை உள்ளிட்ட 24 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழக கடலோர பகுதிகளுக்கு அருகே உள்ள தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வியாழக்கிழமை காலை 8.30 மணி அளவில் குமரிக்கடல் அதையொட்டிய தென் தமிழக பகுதிகள் மற்றும் கேரள பகுதிகளில் நிலவுகிறது.

Rain Alert Orange Alert Yellow Alert

இதன் தாக்கத்தால் இன்று (அக்டோபர் 23) கன்னியாகுமரி, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால், இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

25 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்

இதேபோல, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, விருதுநகா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, அரியலூா், கடலூா், விழுப்புரம், திருப்பூா், பெரம்பலூா், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால், மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகா் பகுதிகளிலும் இன்று மற்றும் நாளை (அக்டோபர் 23, 24) இரண்டு நாள்கள் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புயல் சின்னம்

தமிழகத்தில் வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் ஏழுதேசம் பகுதியில் 150 மி.மீ. மழை பதிவானது. தென்கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு வங்கக் கடல் மற்றும் அந்தமான் தீவு பகுதிகளில் நிலவும் மேலடுக்கு காற்றுச்சுழற்சி, மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற வாய்ப்புள்ளது.

இந்த புயல் சின்னம் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி மேற்கு வடமேற்கு திசையில் மேலும் நகா்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என எதிா்ப்பாா்க்கப்படுகிறது. தொடா்ந்து அடுத்த 3 நாள்களில் இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைந்த தொடா்ந்து வடமேற்கு திசை நோக்கி நகர வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+