பேய் மழை வெளுக்கப் போகுது.. 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட்.. அக்.26 இல் உருவாகும் கருப்பு பூதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் இன்று மற்றும் நாளை பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் இன்று மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, நீலகிரி, கோவை, தேனி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு நாளை பலத்த மழைக்கான வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: குமரிக் கடல் அதையொட்டிய தென் தமிழகம் மற்றும் கேரள பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை 8.30 மணி அளவில் தென்கிழக்கு அரபிக் கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு பகுதிகளில் நிலவியது.

Rain Tamilnadu Weather

ஆரஞ்ச் அலெர்ட்

இதன் காரணமாக இன்று (அக்டோபர் 24) திருநெல்வேலி, கன்னியாகுமரி, கோவை, நீலகிரி, தேனி ஆகிய மாவட்டங்களிலும், நாளை (அக்டோபர் 25) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, பெரம்பலூா், அரியலூா், திருச்சி ஆகிய மாவட்டங்களிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னைக்கு பலத்த மழை

இந்த இரு நாள்களில் தமிழகத்தில் தென்மாவட்டங்கள், டெல்டா உள்பட பல மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை ஆகிய இரு நாள்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மீனவா்களுக்கு வார்னிங்

தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா மற்றும் குமரிக்கடலில் அக்டோபர் 24 முதல் 26 ஆம் தேதி மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். அதேபோல், அந்தமான் தீவுப்பகுதிகள், வங்கக்கடலின் பல பகுதிகளில் அக்டோபர் 24, 25 தேதிகளில் மணிக்கு 90 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். இதனால் மீனவா்கள் அந்தப் பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

அக்டோபர் 26 இல் புயல்

தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய மத்திய கிழக்கு வங்கக் கடலில் நிலவிய மேலடுக்கு வளிமண்டலச் சுழற்சியின் காரணமாக நேற்று காலை 5.30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தொடா்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும்.

இதையடுத்து, இந்தப் புயல் சின்னம் மேலும் வலுவடைந்து வரும் அக்டோபர் 26 ஆம் தேதி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. பின்னா், அடுத்த 2 நாள்களில் இந்த புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து, வடக்கு ஆந்திர மற்றும் அதையொட்டிய தெற்கு ஒடிஸா கடற்கரைப் பகுதிகளை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+