தமிழகத்தில் இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு? சென்னையில் இன்று இடி, மின்னலுடன் கொட்டப்போகுது!
சென்னை: தமிழகத்தில் (Tamil Nadu Weather update) பல்வேறு இடங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. தலைநகர் சென்னையிலும் நேற்று மாலைக்கு பிறகு பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. இந்த நிலையில் இன்றும் சென்னையில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் தென் மேற்கு பருவமழையின் காரணமாக தற்போது மழை பெய்து வருகிறது. கடந்த ஜூன் மாதமே தென் மேற்கு பருவமழை தொடங்கியிருந்தாலும், சராசரியாக தமிழகத்தில் பெய்ய வேண்டிய மழையை விட குறைவாக பெய்துள்ளது. ஆகஸ்டு மாதத்தின் முதல் வாரத்தில் மழை அதிகமாக பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

பரவலாக பெய்த கனமழை
அதன்படி கடந்த வாரம் முதல் தமிழகத்தில் தொடர்ந்து பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. கடந்த சில நாட்களாக தென்காசி, குமரி, தூத்துக்குடி, நெல்லை, தேனி, நீலகிரி, கோவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வந்தது. இதன்பின்னர் தற்போது இரண்டு நாட்களாக வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர், ஈரோடு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை என பரவலாக நேற்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டியது. குறிப்பாக தலைநகர் சென்னையில் கோயம்பேடு, அண்ணாநகர், பாடி, வில்லிவாக்கம், அயனாவரம், கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
இன்று மழை பெய்ய வாய்ப்பு
இந்த நிலையில் இன்றும் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், தலைநகர் சென்னையில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதவாது:-
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களில் கனமழை பெய்தது. இன்று திங்கட்கிழமை முதல் வரும் 16 ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் இன்று மழைக்கு வாய்ப்பு
சென்னையில் இன்று திங்கட்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36 முதல் 37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்: இன்று முதல் 14-08-2025 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
இன்று தென்மேற்கு வங்கக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12-08-2025: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
13-08-2025 மற்றும் 14-08-2025: தென்மேற்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடலின் தெற்கு பகுதிகள், அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் வடக்கு ஆந்திரா - தெற்கு ஒரிசா கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அரபிக்கடல் பகுதிகள்:
இன்று 11-08-2025: தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு அரபிக்கடலின் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
12-08-2025: மத்தியமேற்கு அரபிக்கடலின் அநேக பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகள், தென்மேற்கு அரபிக்கடலின் சில பகுதிகள், வடக்கு அரபிக்கடலின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும், வடக்கு குஜராத் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications